Home /News /trend /

தண்ணீர் பாட்டில் அதிக விலைக்கு விற்பதை கண்டித்த பயணி- ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்ட பாண்ட்ரி ஊழியர்கள்... அதிர்ச்சி சம்பவம்!

தண்ணீர் பாட்டில் அதிக விலைக்கு விற்பதை கண்டித்த பயணி- ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்ட பாண்ட்ரி ஊழியர்கள்... அதிர்ச்சி சம்பவம்!

ரயில் மாதிரி படம்.

ரயில் மாதிரி படம்.

ரயில்வே நிர்ணயித்த 15 ரூபாயை விட அதிகமாக 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் அது குறித்து பயணி கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஊழியர்க்கும் பயணிக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    ரயிலில் தண்ணீர் பாட்டில் ரயில்வே நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததை எதிர்த்து கேள்வி கேட்ட பயணியை பாண்ட்ரி ஊழியர்கள் மூவர் சேர்ந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜான்சி நிலையத்திலிருந்து ஒரு நபர் லலித்பூர் செல்ல ஏறியுள்ளார். ரயிலில் பாண்ட்ரி ஊழியர்களால் விற்கப்படும் தண்ணீர் பாட்டில் விலை ரயில்வே நிர்ணயித்த 15 ரூபாயை விட அதிகமாக 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் அது குறித்து பயணி கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஊழியர்க்கும் பயணிக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது.

    Also Read :உண்மை காதல் என்று நிருபிக்க காதலனின் HIV ரத்தத்தைத் தனது உடம்பில் செலுத்திய 15 வயது சிறுமி! அதிர்ச்சி சம்பவம்

    வாக்குவாதம் முற்றி ஊழியர்கள் மூவர் சேர்ந்து அந்த பயணியை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  புகார் வந்ததைத் தொடர்ந்து லலித்பூர் நிலைய ரயில்வே காவல் அதிகாரி நவீன்குமார் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் அந்த பயணி 25 வயதான ஜான்சியை சேர்ந்த ரவி யாதவ் என்பது தெரியவந்துள்ளது. ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் காயங்களுடன் இருந்த அவரை  அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    ரவி யாதவ் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். ரவி யாதவ் அளித்த புகாரில், தண்ணீர் பாட்டில் விலை தொடர்பாக  எனக்கும் பாண்ட்ரி ஊழியருக்கும் வாதம் ஏற்பட்டது. அதில் அந்த ஊழியர் மேலும் இரண்டு ஊழியருடன் இணைந்து என்னை முன்பதிவு இல்லாத பெட்டியிலிருந்து இழுத்துக் கொண்டு சென்று படுக்கை வசதிகொண்ட பெட்டியில் வைத்து அடித்தனர். மேலும் லலித்பூர் நிலையத்தில் என்னை இறங்க விடாமல் பின்னர் ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டனர்’ என்று தெரிவித்துள்ளார்.

    Also Read :இது தான் இந்தியாவிற்கு தேவை... நோட் பண்ணுங்கப்பா - வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்.!

    இதனைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறை இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்குத் தொடர்புடைய பாண்ட்ரி மேலாளர் வினோத் என்ற நபரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திவருவதாக லலித்பூர் நிலைய காவல் அதிகாரி நவீன்குமார் தெரிவித்துள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Moving train, Passengers, Railway police, Water bottle

    அடுத்த செய்தி