ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஐந்து ஆண்டுகள் முன்பு தொலைந்த மூக்கில் அணிந்திருந்த வளையம் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி!

ஐந்து ஆண்டுகள் முன்பு தொலைந்த மூக்கில் அணிந்திருந்த வளையம் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி!

ஜோயி லிகின்ஸ்

ஜோயி லிகின்ஸ்

அமெரிக்காவில் வினோதமாக ஒருவரின் மூக்கில் போட்டு இருந்த மூக்குத்தி 5 வருடம் கழித்து அவரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaAmericaAmericaAmerica

  அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான ஜோயி லிகின்ஸ் என்ற நபர் மூக்கு, காது போன்றவற்றைக் குத்திக்கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். அப்படி அவரின் மூக்கின் நடுப் பகுதியில் ஒரு சிறிய வளையம் ஒன்றை குத்திக் கொண்டுள்ளார். அந்த வளையம் 5 வருடம் முன்பு தொலைந்து போன நிலையில் தற்போது அதனை அவரின் நுரையீரலிலிருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.

  ஜோயி லிகின்ஸ் இரவு தூங்கும் போது முக்கில் போட்டு இருந்த வளையம் வாய்வழியாக அவரின் உடலில் சென்றுள்ளது. அதனைக் கவனிக்காத அவர் தொலைந்த வளையத்தை பல வருடங்களாகத் தேடி வந்துள்ளார்.

  இந்த நிலையில் ஒரு நாள் அவருக்கு மிக அதிக வலி ஏற்பட்டு மூச்சுவிடச் சிரமப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததில், மருத்துவர்கள் முதலில் நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். பின்னர் வலிக்குக் காரணம் எது என்ற உண்மை எக்ஸ்-ரே மூலம் தான் தெரியவந்துள்ளது.

  அவரின் நுரையீரலில் இடது புறத்தில் 5 வருடம் முன்பு தொலைத்துப்போன வளையம் இருந்துள்ளது. இதனைக் கேட்ட ஜோயி லிகின்ஸ் - க்கு முதலில் அதிர்ச்சியாக இருந்துள்ளது. அப்போது தொலைந்த வளையத்தை அவர் விழுங்கி விட்டார் என்ற உண்மையை அப்போதுதான் தெரிந்துகொண்டார்.

  Also Read : 66% இந்திய விமானிகள் விமானம் ஓட்டும்போது தூங்குகிறார்கள் - பயணிகளை அதிரவைத்த சர்வே முடிவு!

  பின்னர் வளையத்தை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அவரின் நுரையீரலிலிருந்து எடுத்துள்ளனர்.  வளையம் அவரின் நுரையீரலைக் கிழிக்காமல் வெளிப்புறமாக இருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இன்றி அறுவை சிகிச்சை முடிவடைந்தது.

  இதனைப் பற்றிக் கூறிய அவர், அந்த வளையத்தை நினைவாக வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இதைப் பலரும் நம்பாததினால் எக்ஸ் - ரே மற்றும் அறுவை சிகிச்சையின் வீடியோ போன்றவற்றைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: America, Viral