விக்னேஷ், நயன்தாரா இருவருமே தங்களின் திரைத்துறையில்
எவ்வளவு பிசியாக இருந்தாலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து நேரம்
செலவிடுவதை தவிர்ப்பதில்லை. தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடி என்றால் சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா, அஜித்-ஷாலினி, சமந்தா-நாக சைதன்யா, சாந்தனு-கிகி இப்படி பல ஜோடிகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே காதலித்து திருமணம் செய்துக்கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வரும் தம்பதிகள் என்று கூறலாம். அந்த வரிசையில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி எப்போது இணைவார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக உள்ளது.
இதையடுத்து கதாநாயகிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் திருமணம் தள்ளி போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் இருவரும் ஒரு ஷோஃபாவில் அமர்ந்துள்ளனர். விக்கி நயனின் கையை பிடித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் பார்ப்பதற்கே கியூட்டாக இருக்கிறது. இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள், சூப்பர்,தலைவிய ஹேப்பிய பாத்துக்குறீங்க என பல கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
மேலும் வேலுநாச்சியார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்