Viral Video : "குட்டையை இப்படி தான் கிராஸ் பண்ணனும்".. பாடம் எடுத்துக்கொண்டே குட்டையில் விழுந்த நபர்- சிரிக்க வைக்கும் வீடியோ

வைரல் வீடியோ

குட்டையை இப்படி தான் கிராஸ் பண்ணனும் என்று சொல்லிக்கொண்டே குட்டையில் விழுந்த நபரின் வைரல் வீடியோ இங்கே..

  • Share this:
இணையத்தில் பல வீடியோக்கள் ஏதோ ஒரு செயல்களால் வைரலாகிறது. சிலர் செய்யும் குறும்பு விஷயங்களால் வீடியோக்கள் வைரலாகும், செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளின் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். சிலரின் வீடியோக்கள் அழகிய நடிப்பு மற்றும் நடனத்தால் வைரலாகும். அதுவே சிலர் எடுக்கும் சாகசங்கள் மற்றும் முயற்சிகள் தவறாக முடியும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில் இங்கு ஒரு வீடியோ இணையவாசிகள் மற்றும் நெட்டிசன்களை சிரிக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

சில நேரங்களில் நாம் குறுக்குவழியில் செல்லும் போது அது நமக்கே ஆபத்தானதாக முடியும். உதாரணத்திற்கு இந்த வீடியோவை எடுத்துக்கொள்ளலாம். அதில் வரும் நபர் சேரும் சகதியுமாக இருக்கும் குட்டையை சுற்றி செல்வதற்கு மலைத்து குறுக்கு வழியை பிரயோகித்தார். ஆனால் அதுவே அவருக்கு பாதகமாக முடிந்தது. இதுதொடர்பாக, டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, " மார்ட்டின் லூயிஸ் என்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி தான் வீடியோவில் வந்த நபர்.

இவர் தனது மனைவி ரேச்சலுடன் மாலத்தீவுக்கு விஜயம் செய்யும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இவரும் இவரது மனைவியும் ஒரு சேற்றுப் பகுதியில் மெதுவாக நடந்து செல்வதை காணலாம். பின்னர் திடீரென லூயிஸ் ஒரு சதுப்பு நிலத்தில் சேரும் சகதியுமாக இருக்கும் குட்டை பகுதியின் குறுக்கே நடக்க முடிவு செய்வதையும் வீடியோவில் காணலாம்.ஆனால் அப்பகுதியில் சேறு அதிகம் இருந்ததால் அவரால் பாதணிகளுடன் நடக்க முடியவில்லை. இதையடுத்து அவற்றை கழட்டி கையில் பிடித்துக்கொண்டார். மேலும் பார்த்து கவனமாக செல்ல வேண்டும் என வீடியோ எடுத்துக்கொண்டிருந்த தன் மனைவியிடம் பேசிய படி காலை குட்டையின் குறுக்கே வைத்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கால் வைத்த இடத்தில் தண்ணீர் ஆழமாக இருந்ததால், குட்டையில் விழுந்தார்.

இதனை பார்க்கும் போது அனைவரின் முகத்திலும் சிரிப்பை வரவைக்கிறது. அதிலும் வீடியோவைப் பார்ப்பதற்கு இன்னும் சுவாரஸ்யமாக இருப்பது பின்னணியில் அவரது மனைவி ரேச்சலின் சிரிப்பு சத்தம் தான். இந்த வீடியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டதிலிருந்து, பல கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் அந்த கிளிப் நெட்டிசன்களை எப்படி சிரிக்க வைத்தது என்பதை பற்றிய கருத்துக்களை பகிரவைத்துள்ளது.

Also read : உங்க அழகின் ரகசியம் என்ன ? ஐஸ்வர்யா மேனனிடம் கேள்வி கேட்ட ரசிகர்..

  

அதில் ஒரு யூசர் குறிப்பிட்டதாவது, “இந்த வீடியோ மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. என்னால் அவருக்கு உதவ முடியாதுதான் ஆனால் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை" என்று எழுதியிருந்தார். “இதைப் பார்ப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை” என்று மற்றொரு யூசர் பகிர்ந்து கொண்டார். இது முற்றிலும் நகைச்சுவையின் தங்கம் என்று மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து லூயிஸ் டெய்லி மெயில் பத்திரிகையிடம் தெரிவித்தாவது, "நாங்கள் தற்போது மாலத்தீவில் இருக்கிறோம். குட்டையின் மறுபுறத்தை கடக்க குறுக்குவழியை உபயோகிக்குமாறு என் மனைவி தான் எனக்கு பரிந்துரைத்தார். நான் நேர்மையாக பதிலளிக்க விரும்புகிறேன். என் கால்கள் ஈரமாகிவிடும் என்று எனக்குத் தெரியும். அதேசமயம் என் கால்சட்டையின் அடிப்பகுதியும் ஈரமாகிவிடக்கூடுமோ என்று கருதினேன்.

Also Read : வித்தியாசமான லுக்கில் இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி.. 
View this post on Instagram

 

A post shared by The3Dumbbells (@the3dumbbellz)

அதனால் காலணிகளை கழட்டி வைத்து விரைவாக கடக்க முயன்றேன். மேலும் அதை ஒரு வேடிக்கையான வீடியோவாக உருவாக்கலாம் என்று நினைத்தேன், எனவே என் மனைவியை வீடியோ எடுக்க சொன்னேன். நான் குட்டையில் முழுவதுமாக மூழ்கியபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் கீழே சென்று கொண்டிருந்தேன். மேலும் குட்டை ஒன்பது முதல் 10 அடி ஆழத்தில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். பின்னர், எப்படியோ கஷ்டப்பட்டு நான் மேற்பரப்பை அடைந்தேன். அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அங்கேயே உட்கார்ந்தேன். அந்த நேரத்தில் எனது மனைவி சுமார் 10 நிமிடங்கள் சிரித்தாள்," என்று கூறியிருந்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: