இங்கிலாந்தில் நடைபெற்ற மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் இடையேயான தொடர் ஓட்டப்பந்தயத்தில் ரிக்கி லைட்பூட் என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதற்கு பரிசாக இந்திய மதிப்பில் 32 லட்ச ரூபாயைப் பரிசுத்தொகையாக வென்றுள்ளார்.
‘மனிதன் vs குதிரை’ (Man vs Horse) என்று அழைக்கப்படும் இப்போட்டி அந்நாட்டில் உள்ள லான்ரிடைய்ட் வெல்ஸ் என்ற நகரில் நடைபெற்றது. இதில் 1000 மனிதர்கள் மற்றும் 50 குதிரைகள் பங்குபெற்றன.
சாதனைப் படைத்த ரிக்கி லைட்பூட்.
இந்த ஓட்டப்பந்தயம் கடந்த 1980-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. கடந்த 44 ஆண்டுகளில் இப்போட்டியில் இதற்கு முன்பு இரண்டு நபர்கள் மட்டுமே குதிரைகளை வென்று முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். தற்போது மூன்றாவது நபராக லைட்பூட் சரித்திரம் படைத்துள்ளார்.
மேன் vs ஹார்ஸ் பந்தயப் பாதை.
மலைப்பாங்கான இடங்கள், சிறிய ஓடைகள், கரடு முரடான சாலைகள் என நீளும் 36 கிலோமீட்டர் பந்தய தூரத்தை 2 மணிநேரம் 22 நிமிடங்கள் 23 நொடிகளில் கடந்து லைட்பூட் முதலிடத்தைப் பிடித்தார்.
பயிற்சியாளர் டீன் பெப்பருடன் ரிக்கி லைட்ஃபூட்(இடது).
அடிப்படையில் ஒரு தீயணைப்பு வீரரான அவர் தன் சொந்த ஊரிலிருந்து போட்டி நடக்கும் ஊருக்கு நீண்ட பயணத்தை மேற்கொண்டதாகவும், இதனால் போட்டிக்கு முன்பு 29 மணிநேரம் தூங்காமலிருந்ததாகவும் தெரிவித்தார்.
தான் குதிரைகளை ஓடி வென்றதை தெரிவித்தபோது தன் மனைவி அச்செய்தியை நம்பவில்லை என ரிக்கி லைட்பூட் தெரிவித்துள்ளார்.
மிக அதிக ஸ்டெமினா தேவைப்படும் இந்த ஓட்டப்பந்தயத்தில் போதிய ஓய்வு இல்லாமலேயே வென்ற லைட்பூட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Published by:Saravana Siddharth
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.