Home /News /trend /

மூன்று சிறுநீரகங்களை உடைய அதிசய மனிதர்.. அச்சப்பட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை!

மூன்று சிறுநீரகங்களை உடைய அதிசய மனிதர்.. அச்சப்பட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை!

சிறுநீரகம்

சிறுநீரகம்

Trending | ஏற்கனவே கண் தானம் செய்வதாக உறுதி செய்துள்ள இவர், தனக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது தெரிந்ததும் கண்டிப்பாக நான் இதையும் தானம் செய்வேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம் என்று கூறுவது உண்டு ஆனால் சில சமயங்களில் அந்த இயற்கையின் படைப்பில் சிலர் தனித்துவமாக இருப்பதும் உண்டு. இவ்வகையில் கான்பூரை சேர்ந்த ஒருவருக்கு மூன்று கிட்னிகள் இருப்பதாக தெரிய வர பலரும் அதனை ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரை சேர்ந்த “சுசில் குப்தா” என்னும் தொழிலதிபருக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது பலரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது.

    இது குறித்து நியூஸ் 18 – உடன் பகிர்ந்து கொண்டவர், ”கடந்த 2020 ஆம் ஆண்டு பித்தப்பை சம்பந்தமான ஒரு அறுவை சிகிச்சைக்காக எனக்கு அல்ட்ரா சவுண்ட்(Ultrasound) சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் தான் எனக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பதாக தெரிய வந்தது.

    முதலில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நான், ஏதாவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வாறு தெரிந்திருக்கும் என நினைத்து கொண்டேன். ஆனால் அதற்கு சில மாதங்கள் கழித்து மீண்டும் எனக்கு அல்ட்ரா சவுண்டு சோதனை செய்யப்பட்ட போது தான் உண்மையிலேயே எனக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது

    உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை:

    எனக்கு இப்போது 52 வயது ஆகிறது எனினும், இதுநாள் வரை இந்த மூன்று சிறுநீரகங்கள் இருப்பதினால் எனக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அனைத்து சாதாரண மனிதர்களைப் போல நானும் எனது வாழ்க்கையை சாதாரணமாகவே வாழ்ந்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Read More : ஓட ஓட துரத்திய உலகின் மிகக் கொடிய பறவை.. உயிர் தப்பிய திக் திக் வீடியோ!


    உடல் உறுப்பு தானம் செய்ய உறுதி செய்துள்ளேன்:

    ஏற்கனவே கண் தானம் செய்வதாக உறுதி செய்துள்ள இவர், தனக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது தெரிந்ததும் கண்டிப்பாக நான் இதையும் தானம் செய்வேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மரணத்திற்குப் பிறகு தன்னுடைய உடல் உறுப்புக்கள் அனைத்தையும் தானம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    என்ன சொல்கிறது மருத்துவ உலகம்:

    ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு சிறுநீரகமே போதுமானது என மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தன்னுடைய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்துவிட்டு, ஒரே ஒரு சிறுநீரகத்துடனே ஒருவர் எந்த வித குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழமுடியும் என மருத்துவ உலகம் கூறுகிறது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த சிறுநீரகத் துறை வல்லுநர் டாக்டர் உமேஷ் டூபே, “இது போன்ற மூன்று சிறுநீரகத்துடன் ஒருவர் இருப்பது நம் நாட்டிலேயே ஒரு அரிதான நிகழ்வு எனவும் ஆனால் இதில் எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், “ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ ஒரு சிறுநீரகமே போதுமானது. ஆனால் அவர் உடலளவில் ஏதாவது பிரச்சனையோ அல்லது சிரமத்தையோ எதிர்கொள்வதாக உணரும்பட்சத்தில் கண்டிப்பாக அவர் இது குறித்து ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது” என தெரிவித்தார்
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Kidney, Trending, Uttar pradesh, Viral

    அடுத்த செய்தி