ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மெடிக்கல் மிராக்கிள்: மூளைச் சாவு அடைந்ததாகக் கூறப்பட்ட நபரின் உடலிலிருந்து உறுப்புகளை அகற்றும் முன் தெரிந்த அசைவு!

மெடிக்கல் மிராக்கிள்: மூளைச் சாவு அடைந்ததாகக் கூறப்பட்ட நபரின் உடலிலிருந்து உறுப்புகளை அகற்றும் முன் தெரிந்த அசைவு!

மூளைச் சாவு அடைந்ததாகக் கூறப்பட்ட பாஸ்டர் குடும்பம்

மூளைச் சாவு அடைந்ததாகக் கூறப்பட்ட பாஸ்டர் குடும்பம்

மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் ரத்த ஒட்டம் பெற்று அசைந்த அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaUnited states of AmericaUnited states of America

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் மருத்துவர்களால் "மருத்துவ ரீதியாக" இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பாதரியார் ஒருவர் அதிசயமான முறையில் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ள சம்பவம் தான் சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வந்தது.

ரியான் மார்லோ என்ற அந்த பாஸ்டர் லிஸ்டீரியா என்ற அரிய பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 15 நாட்களுக்கும் மேலாக பாஸ்டர் ரியான் மார்லோவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் உடல்நிலை மோசமானதே தவிர, குணமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த ரியான் மார்லோ சுமார் 2 வாரச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டு விட்டதாக மனமுடைந்து தனது சோஷியல் மீடியாவில் (பேஸ்புக் லைவில்) அவரது மனைவி மேகன் (Megan)தெரிவித்திருந்தார். பாக்டீரியா தொற்று மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தியதால், 'மூளைச் சாவு' ஏற்பட்டதாக மேகனிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடந்ததை எண்ணிக் கலங்க வேண்டாம் என்று ஆறுதல் தெரிவித்திருந்தனர். இதனிடையே 3 பிள்ளைகளின் தந்தையான  ரியான் மார்லோ உறுப்பு தானம் செய்பவராகத் தன்னை பதிவு செய்திருந்ததால், அவரது உறுப்புகளுக்குப் பொருந்திப் போகக் கூடிய நோயாளிகளைக் கண்டறியும் முயற்சிக்காக அவரை லைஃப் சப்போர்ட் உபகரணங்களின் ஆதரவுடன் ICU-வில் வைத்திருந்தனர். பின் ஒரு கட்டத்தில் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டு, லைஃப் சப்போர்ட் உபகரணங்களையும் நீக்கிவிட மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இந்நிலையில் தான் ரியானின் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருக்கும் அவரை இறுதியாகப் பார்த்து விடை கொடுக்க சென்றனர். சென்ற இடத்தில் உடன் இருந்த உறவினர் ஒருவர் தற்செயலாகத் திடுக்கிடும் ஒன்றைக் கவனித்தார். மேகனின் உறவினர் ஒருவர் கூற்றுப்படி மூளைச்சாவு அடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட ரியான் முன் அவரது குழந்தைகள் பேசிய வீடியோ ரெக்கார்ட்ஸ் பிளே செய்து காட்டப்பட்டது.

Also Read : பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

அப்போது லைஃப் சப்போர்ட் ஆதரவுடன் இருக்கக் கூடிய ரியானின் கால்கள் நடுங்கியது அல்லது இழுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உறுப்புகளை அகற்ற இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் ரியானிடமிருந்து வந்த உடல் அசைவால் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து தனது கணவரின் மூளை செயல்பாட்டை மீண்டும் ஒருமுறை பரிசோதிக்க மருத்துவக் குழுவிடம் மேகன் கேட்டுக் கொண்டார். இந்த CT ஸ்கேன் பரிசோதனையில் அதிர்ச்சியூட்டும் வகையில் ரியானின் மூளைக்கு ரத்தம் ஓட்டம் செல்வது தெரியவந்தது.

ரியானின் மூளை செயல்படுவதை அறிந்து அனைவருமே அதிர்ச்சியடைந்தனர், மருத்துவர்கள் அவரை "மருத்துவ ரீதியாக" இறந்துவிட்டதாகத் தவறாகக் கருதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சிகிச்சையில் உள்ள ரியானுக்கு அவ்வப்போது இதயத்துடிப்பு அதிகரித்துக் காணப்படுவதாகவும், வேறு எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்றும் அவர் மனைவி மேகன் கூறி இருக்கிறார்.

Published by:Janvi
First published:

Tags: Brain death, Viral News