ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

படித்தவுடன் கொடுத்துவிடவும்... 84 ஆண்டுகளுக்கு பின் புத்தகத்தை திருப்பி கொடுத்த நபர்..

படித்தவுடன் கொடுத்துவிடவும்... 84 ஆண்டுகளுக்கு பின் புத்தகத்தை திருப்பி கொடுத்த நபர்..

வைரல் பதிவு

வைரல் பதிவு

தன்னுடைய தாத்தாவால் நூலகத்தில் இருந்து, படிப்பதற்காக எடுக்கப்பட்ட புத்தகத்தை, 84 ஆண்டுகள் கழித்து நேர்மையுடன் திருப்பிக் கொடுத்துள்ளார் ஒரு மனிதர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தன்னுடைய தாத்தாவால் நூலகத்தில் இருந்து, படிப்பதற்காக எடுக்கப்பட்ட புத்தகத்தை, 84 ஆண்டுகள் கழித்து நேர்மையுடன் திருப்பிக் கொடுத்துள்ளார் ஒரு மனிதர்.

  கேப்டன் வில்லியம் ஹாரிசன் என்பவர், ஆங்கில எழுத்தாளர் ரிச்சர்ட் ஜெஃபரீஸால் எழுதப்பட்ட “ரெட் டீர் (Red Deer)” என்ற புத்தகத்தை அக்டோபர் 11ஆம் தேதி, 1938 ஆம் ஆண்டு நூலகத்திலிருந்து எடுத்து வந்துள்ளார். ஆனால் ஞாபக மறதியாக அந்த புத்தகத்தை திருப்பிக் கொடுக்காமல், அது அவரிடமே இருந்து வந்துள்ளது. அவர் 1957 ஆம் மரணமடைந்தவுடன் அவருடைய மற்ற பொருட்களுடன் சேர்த்து இந்த புத்தகத்தையும் சேர்த்து வைத்துள்ளனர்.

  ஆனால் அவரின் பேரனான பேடி ரியோர்டன் என்பவர், சமீபத்தில் தன்னுடைய தாத்தாவினால் நூலகத்தில் இருந்து படிப்பதற்கு கடன் வாங்கப்பட்ட அந்த புத்தகத்தை அவரின் மற்ற பொருட்களை ஆராயும் பொது கண்டெடுத்துள்ளார். இதை பார்த்து வியந்த அவர், புத்தகத்தை கடன் கொடுத்த அந்த நூலகத்திற்கே திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். மேலும் அதற்குண்டான அபராத தொகையையும் அவர் கட்டியுள்ளார்.

  Read More : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

  யேர்ல்ஸ் டான்கார்னி்கீ என்று நூலகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த பதிவுகளை புகைப்படத்தோடு பதிவேற்றியுள்ளனர். மேலும் அதனோடு சில வாசகங்களையும் இணைத்துள்ளனர். ”இதுபோன்று சம்பவங்களை தினந்தோறும் நீங்கள் பார்க்க முடியாது. ரிச்சர்ட் ஜெஃபரீஸால் எழுதப்பட்ட “ரெட் டீர்” என்ற புத்தகம் 84 ஆண்டுகள் மற்றும் இரண்டு வாரங்கள் கழித்து திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த புத்தகத்தை படிப்பதற்காக எடுத்துச் சென்றவரின் பேரன் பேடி ரியோர்டன், 84 ஆண்டுகள் கழித்து தன் தாத்தாவினால் கடன் வாங்கப்பட்ட இந்த புத்தகத்தை நூலகத்திற்கு, அதற்கு உண்டான அபராத தொகையையும் செலுத்தி திருப்பி கொடுத்துள்ளார்.

  வாரத்திற்கு ஒரு பென்னி என்ற வீதத்தில், மொத்தம் 18 புள்ளி 27 பவுண்டுகளை அவர் அபராதமாக செலுத்தியுள்ளார்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தை எடுத்துச் சென்ற கேப்டன் வில்லியம் ஹாரின்சனின் புகைப்படத்தையும் அந்த பதிவில் இணைத்துள்ளனர். “கடைசியாக இந்த அற்புதமான புத்தகம் அதன் வீடு வந்து சேர்ந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளனர்.


  அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில், புத்தகத்தை திருப்பி கொடுக்க வேண்டிய தேதி மீதமிருந்தாலும், அதற்கு முன்னரே நீங்கள் புத்தகத்தை படித்து முடித்தால், அதனை நூலகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே அனைவரும் புத்தகங்களை திருப்பி அளித்து வருகின்றனர். புத்தகத்தை கடன் வாங்கி 14 நாட்களுக்கு மேல் கடந்தவர்களுக்கு வாரத்திற்கு ஒரு பென்னி என்ற விகிதத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது.

  எது எப்படியோ இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் குதூகலமாகிவிட்டனர். புத்தகத்தை திருப்பிக் கொடுத்தவரின் நேர்மையை பாராட்டி பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral