முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Zomato டெலிவரி ஏஜென்ட்டாக மாறிய முன்னாள் டிசிஎஸ் ஊழியரின் அனுபவம்.. வைரலாகும் போஸ்ட்!

Zomato டெலிவரி ஏஜென்ட்டாக மாறிய முன்னாள் டிசிஎஸ் ஊழியரின் அனுபவம்.. வைரலாகும் போஸ்ட்!

காட்சி படம்

காட்சி படம்

தமிழகத்தை சேர்ந்த சீனிவாசன் ஜெயராமன் சென்னையில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஆட்டோமேஷன் இன்ஜினியராக பார்த்து வந்த வேலையே சமீபத்தில் விட்டுவிட்டார்.

கொரோனா தொற்று நோயானது ஆன்லைன் ஷாப்பிங்கை மக்கள் சார்ந்திருப்பதை அதிகப்படுத்தி உள்ளது. தொற்றுப்பரவல் காரணமாக டோர் டெலிவரி சேவைகள் துறை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. தவிர தொற்று பலரது தொழில் வாழ்க்கையையும் கூட மாற்றி இருக்கிறது.

தமிழகத்தை சேர்ந்த சீனிவாசன் ஜெயராமன் சென்னையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் ஆட்டோமேஷன் இன்ஜினியராக பார்த்து வந்த வேலையே சமீபத்தில் விட்டுவிட்டார். வேறு ஒரு வேலை கிடைத்தாலும் அதில் சேர்வதற்கு சில நாட்கள் இடைவெளி இருந்தது. இந்த பிரேக்கில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை தவிர வேறு ஏதாவது புதிய திறன்களை கற்று கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.

கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன், வாகனத்தில் பேக்கேஜ்கள் அல்லது உணவுகள் அடங்கிய ஒரு கனமான பையுடன் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி திரியும் டெலிவரி ஏஜென்ட்களை பார்ப்பது நாம் அன்றாடம் பார்க்கும் பொதுவான காட்சிகளில் ஒன்றாகும். இந்நிலையில் டெலிவரி ஏஜென்ட் வேலையே செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டு, Zomato-வில் டெலிவரி ஏஜென்டாக பார்ட்-டைம் வேலை பார்க்க முடிவு செய்தார் சீனிவாசன் ஜெயராமன்.

வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே தன்னை போன்ற ஃபுட் டெலிவரி ஏஜென்ட்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவை வழங்க, நேரத்தோடு போட்டி போட்டு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஜெயராமன் பார்த்தார். இதனை தொடர்ந்து முன்னாள் டிசிஎஸ் ஊழியரான சீனிவாசன் ஜெயராமன், டெலிவரி எக்சிகியூட்டிவாக தனது சுருக்கமான அனுபவத்தை LinkedIn-ல் ஷேர் செய்து உள்ளார்.

also read : திடீரென பற்றி எறிந்த ராயல் என்ஃபீல்டு பைக் - வைரல் வீடியோ

LinkedIn-ல் டெலிவரி எக்ஸிகியூட்டிவாக வேலை பார்த்த போது தான் எதிர்கொண்ட முக்கிய சவால்களை விவரித்து உள்ளார்.

* பல சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்கள் டெலிவரிக்கான சரியான இடத்தை குறிப்பிடுவதில்லை அல்லது தங்கள் தொலைபேசி எண்களை அப்டேட் செய்திருக்க மாட்டார்கள் எனவே பழைய அல்லது தவறான தொலைபேசி எண்களுக்கு கால் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறி உள்ளார் ஜெயராமன்.

* சில சமயங்களில் நாங்கள் (டெலிவரி ஏஜென்ட்கள்) புதிய இடத்திற்குச் சென்றால் குறிப்பிட்ட ரெஸ்டாரன்டை கண்டுபிடிக்க முடியாது. கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தினாலும் கூட அதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்கிறார்.

* லாங் டிஸ்டன்ஸ் டெலிவரி லொக்கேஷன்.. உணவை எடுக்க வேண்டிய இடத்திலிருந்து 14 கி.மீ தள்ளி இருக்கும் லொக்கேஷனுக்கு டெலிவரி செய்ய வேண்டிய ஒரு ஆர்டரை நான் பெற்றேன். 3 மணிநேர ஆன்லைன் நேரத்தில் இது எனது மூன்றாவது ஆர்டர் மற்றும் அதுவே கடைசியும் கூட என்று தனது சொந்த அனுபவத்தையும் விவரித்துள்ளார் ஜெயராமன்.

also read : நியாயமற்ற தொழில் முறைகளை கையாண்டதாக விசாரணையை எதிர்கொள்ள உள்ள Swiggy, Zomato

* ஹாட்ஸ்பாட் லொக்கேஷன்ஸ் என்பவை அதிக ஆர்டர்களை பெறும் என்பது பொதுவான கருத்து. ஆனால் பீக் ஹவர்ஸின் போது கூட ஹாட்ஸ்பாட் லொக்கேஷன்ஸ்களில் இருந்து மிகவும் குறைவான ஆர்டரை (3 மணிநேரத்தில் 3 ஆர்டர்களை மட்டுமே) பெற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

* கடைசியாக நாளுக்கு நாள் உயர்ந்த வரும் பெட்ரோல் விலை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்றார். Zomato-வை டேக் செய்து, “தயவுசெய்து எங்கள் வீரர்களுக்கு உதவவும் /ஆதரவாக இருக்கவும். பெட்ரோல் விலை உயர்வுக்கு உதவ நீங்கள் திட்டமிட்டுள்ள சில அறிவிப்புகளைப் பார்த்தேன். உண்மையில் பாராட்டுகிறேன். அவர்களுக்கு தொடர்ந்து உதவுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

பலர் டெலிவரி ஏஜென்ட் வேலையை மரியாதை குறைவு நினைக்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். எந்த வேலையும் எளிதானது மற்றும் மரியாதையற்றது அல்ல. நாம் செய்வதை நேசித்தால் அதுவே இந்த உலகில் சிறந்த வேலையாக இருக்கும். இதை தொழிலாகத் தேர்ந்தெடுக்கும் மக்களை நான் மதிக்கிறேன், வாழ்த்துகிறேன்” என்று ஜெயராமன் தனது போஸ்ட்டில் கூறியுள்ளார்.

First published:

Tags: TCS, Zomato