Home /News /trend /

‘காத்து வாக்குல மூன்று காதல்’.. திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்..

‘காத்து வாக்குல மூன்று காதல்’.. திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்..

வைரல் நீயூஸ்

வைரல் நீயூஸ்

Viral News : மத்திய பிரதேஷத்தை சேர்ந்த ஒரு நபர் மூன்று பெண்களுடன் ஒரே நேரத்தில் குடும்பம் நடத்திவந்துள்ளார்.

லிவின் ரிலேஷன்ஷிப் அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழும் வாழ்க்கை தற்போது வரை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் 15 வருடங்கள் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒரு நபர் பற்றிய செய்தி சமீபத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.

தற்போது மூன்று பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கூட இரண்டு நாயகிகள் தான் இருந்தார்கள். ஆனால் இந்த நபர் அதையும் தாண்டி, மூன்று பெண்களுடன் வாழ்ந்து தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

பலருக்கும் ஒரு பெண்ணை காதலித்து பிரேக்அப் ஆகாமல் திருமணம் செய்து கொண்டு எப்படியோ சமாளித்து வாழ்வதே பெரிய போராட்டமாக இருக்கும் நிலையில் மத்திய பிரதேஷ் சேர்ந்த ஒரு நபர் மூன்று பெண்களுடன் எப்படி வாழ்ந்துள்ளார்? மத்திய பிரதேச அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நான்பூர் என்ற ஊரில் இவர் மூன்று பெண்களுடன் திருமணம் செய்துள்ளார்.

மூன்று பெண்களை திருமணம் செய்த நபரின் பெயர் சமர்த் மௌரியா. இவர் ஒரு மலைவாசி இனத்தை சேர்ந்தவர். சமீபத்தில் நடந்த இவருடைய திருமணத்திற்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மூன்று பெண்களையும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாகவே மூன்று பெண்களுடன் வாழ்ந்து வந்த காலத்தில் மொத்தம் ஆறு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமர்த் மௌரியா வெவ்வேறு காலகட்டத்தில் ஒவ்வொரு பெண்ணின் மீதும் காதலில் விழுந்துள்ளார். அதாவது காதல் ஒரு முறை தான் வரும், மறுமுறை வராது என்று சிலர் கூறிக் கொண்டிருந்தாலும், ஒரு காதல் பிரேக் அப் ஆனால் அடுத்த காதல் இருக்கிறதே என்றும் வேறு சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் மீது வேண்டுமானாலும் காதல் வரலாம். எல்லாரையும் ஒரே நேரத்தில் காதலிக்க முடியும் என்பதை சமர்த் நிரூபித்துள்ளார்.

also read : பீட்சா ஆர்டர் செய்ததற்காக திருமணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாப்பிள்ளை தோழன்...

மூன்று பேரை காதலித்தாலும் மூன்று பெண்களுக்குமே சிறந்த காதலனாக நடந்து கொண்டுள்ளார். அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்த மூன்று பெண்களையும் அவரவர் வீட்டில் இருந்து அழைத்து வந்துவிட்டார்.



இத்தனை ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த சமர்த் திடீரென்று திருமணம் செய்வதற்கு என்ன காரணம் என்று நினைக்கலாம். இவர் மலைவாசி இனத்தைச் சேர்ந்தவர். எனவே இவர் திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களுடைய இனம் சார்ந்த எந்த விசேஷங்களிலும் கலந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருந்ததாக கூறப்படுகிறது.

மலைவாசி இனங்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டால் தான் இவர் மற்றவர்களுடன் இணைந்து அவர்களுடைய விசேஷங்களில் கலந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

மூன்று பெண்களையும் ஒரு சேர திருமணம் செய்து கொண்ட சமர்த் மௌரியா, “எங்கள் இனப்படி பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். இனி என்னால் எங்களுடைய விசேஷங்கள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்!
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி