Home /News /trend /

யார் சுட்ட தோசை, வெயில் சுட்ட தோசை.. வைரலாகும் வீடியோ - நெட்டிசன்களின் கருத்து என்ன?

யார் சுட்ட தோசை, வெயில் சுட்ட தோசை.. வைரலாகும் வீடியோ - நெட்டிசன்களின் கருத்து என்ன?

viral video

viral video

Viral Video | கொழுத்தும் வெயிலை நம் வீட்டை சுற்றியுள்ள சிமெண்ட் தளங்கள், மொட்டை மாடி, பைக் சீட், சாலை உள்ளிட்ட திறந்தவெளி பகுதிகளில் மிகுதியான சூடு இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். அதில் இளைஞர் ஒருவர் செய்த செயல் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
தற்போது தமிழகத்தில் கோடை வெயிலுக்கு மத்தியில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து, ஓரளவுக்கு வெப்பத்தின் கொடுமையை குறைத்து வருகிறது. அதே சமயம், நாட்டின் பிற பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பது கூட சவால் மிகுந்த காரியமாக மாறி வருகிறது.

நாட்டின் பல பகுதிகளில் 40 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் முடங்கி இருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே செல்ல வேண்டி இருப்பவர்கள், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பயணம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

கோடை வெயிலில் சமையல்

கொழுத்தும் வெயிலை நம் வீட்டை சுற்றியுள்ள சிமெண்ட் தளங்கள், மொட்டை மாடி, பைக் சீட், சாலை உள்ளிட்ட திறந்தவெளி பகுதிகளில் மிகுதியான சூடு இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். அந்த வெப்பத்தின் கொடுமையை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், கொஞ்சம் நகைச்சுவையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் வினோதமான செயல்களை நம் மக்கள் அவ்வபோது செய்வது உண்டு.

Read More : தினமும் 2 கி.மி நடந்து சென்று உரிமையாளருக்கு உணவு கொண்டு சேர்க்கும் நாய் - வைரல் வீடியோ


அந்த வகையில், வெயிலின் சூட்டில் இளைஞர் ஒருவர் சமையல் செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. Street food of BhagyaNagar என்ற பெயரிலான ஐடியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவர், வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது பைக் சீட்டின் மீது தோசை ஊற்றும் முயற்சியை மேற்கொள்கிறார். சற்று நேரத்தில் அந்தத் தோசையை நன்றாக வேக வைத்து அவர் எடுத்துவிட்டார்.




இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ 12 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்க்கும் பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “இனி சமையல் காஸ் சிலிண்டர் விலை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இதேபோல நீங்கள் தினந்தோறும் வெயிலில் சமைத்து விட்டால் சிலிண்டர் செலவு மிச்சம்’’ என்று கூறியுள்ளார்.

சித்திரிக்கப்பட்ட வீடியோ?

அதே சமயம், நெட்டிசன்கள் பலர் இது உண்மையான நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்றும், இது சித்திரிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறி வருகின்றனர். வீடியோவை எடிட் செய்து பதிவர் வெளியிட்டுள்ளார் என்றும், இது பொதுமக்களை ஏமாளியாக்கும் முயற்சி என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். தோசை சுட்டது உண்மையோ, பொய்யோ ஆனால் இந்த வீடியோ பல லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி