Home /News /trend /

King Cobra video: ராஜநாகத்திற்கு ‘கிஸ்’ கொடுத்த நபர்... பதிலுக்கு என்ன செய்தது தெரியுமா?

King Cobra video: ராஜநாகத்திற்கு ‘கிஸ்’ கொடுத்த நபர்... பதிலுக்கு என்ன செய்தது தெரியுமா?

Kingcobra viral video | பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் வீடியோவில் நாம் பார்க்கப்போகும் மனிதரோ, பாம்புகளின் அரசனான கிங் கோப்ராவின் தலையில் முத்தமிடும் வீடியோவை பதிவிட்டு நம்மை எல்லாம் மெர்சலாக்கியுள்ளார்.

Kingcobra viral video | பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் வீடியோவில் நாம் பார்க்கப்போகும் மனிதரோ, பாம்புகளின் அரசனான கிங் கோப்ராவின் தலையில் முத்தமிடும் வீடியோவை பதிவிட்டு நம்மை எல்லாம் மெர்சலாக்கியுள்ளார்.

Kingcobra viral video | பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் வீடியோவில் நாம் பார்க்கப்போகும் மனிதரோ, பாம்புகளின் அரசனான கிங் கோப்ராவின் தலையில் முத்தமிடும் வீடியோவை பதிவிட்டு நம்மை எல்லாம் மெர்சலாக்கியுள்ளார்.

    அமெரிக்காவை சேர்ந்த ஊர்வன விலங்குகள் ஆர்வலரான பிரையன் பார்சிக் ராஜநாகத்தின் தலையில் முத்தமிடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தலையில் முத்தமிட்ட மறுகணமே ஆக்ரோஷத்துடன் ராஜநாகம் கொடுத்த எதிர்வினை பார்ப்பவர்களை பதறச் செய்தது.

    இன்டர்நெட் எப்போதுமே ஒரு மாயாஜலம் உலகம் போன்றது, அதில் படங்கள், மீம்ஸ்கள், கருத்து மோதல்கள், கமெண்ட்கள் என பல வேடிக்கையான விஷயங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். குறிப்பாக வித்தியாசமான வீடியோக்கள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றனர். சில வீடியோக்கள் நம்மை சிரிக்கவைக்கும், சில நம்மை அழவைக்கும், சில வீடியோக்களோ பார்த்த மாத்திரத்தில் நம்மை மிரளவைக்கும்.

    அப்படிப்பட்ட வீடியோவை தான் ‘Snakebytestv’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார். பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் வீடியோவில் நாம் பார்க்கப்போகும் மனிதரோ, பாம்புகளின் அரசனான கிங் கோப்ராவின் தலையில் முத்தமிடும் வீடியோவை பதிவிட்டு நம்மை எல்லாம் மெர்சலாக்கியுள்ளார்.

    அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உடிகா நகரில் ஊர்வன விலங்குகளுக்கான பூங்கா உள்லது. அதில் பிரையன் பார்சிக் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் The reptile army (ஊர்வன ராணுவம்) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாம்பு, ஆமை, சிலந்தி, முதலை, பெரிய சைஸ் பல்லிகள், மலைப்பாம்பு என அனைத்து வகையான ஊர்வனங்களுடன் விதவிதமான வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

    Read More : ஹோட்டல் ரூமில் தூங்கிய போது நிகழ்ந்த விபரீதம் - காது கேட்காததால் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்த நபர்!


    பெரிய சைஸ் மலைபாம்புகளுக்கு உணவு கொடுப்பது, அவற்றை அசால்ட்டாக தூக்கிக் கொண்டு போஸ் கொடுப்பது, ஷோபாவில் அதனுடன் அமர்ந்திருப்பது போன்ற பலவித்தியாசமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

    பிரையன் பார்சிக்கின் இதுபோன்ற வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை கண்டு ரசிப்பதற்காகவே ‘Snakebytestv’ என்ற அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோப் செய்து வருகின்றனர். பிரையன் பார்சிக்கின் தற்போது பாம்புகளே கண்டு அஞ்சி நடுக்கும் கிங் கோப்ராவிற்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை பதிவிட்டு நெட்டிசன்களை நிலைகுலைய வைத்திருக்கிறார்.

    https://www.instagram.com/p/CcSu2JAAy_1/

    அந்த வீடியோவில் ஆக்ரோஷமான ராஜநாகம் ஒன்று படமெடுத்து நிற்பது காண்பிக்கப்படுகிறது. அதன் பின்னால் இருக்கும் பிரையன் பார்சிக் மெதுவாக முட்டி போட்டு, எவ்வித அசைவும் இல்லாமல் ராஜ நாகத்தின் தலையை நோக்கி குனிந்து, அதன் மீது முத்தமிடுகிறார். பிரையன் பார்சிக்கின் இந்த செயலை விரும்பாத ராஜநாகம் கோபத்துடன் கேமராவை பார்த்து சீறும் காட்சிகள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆனால் பிரையன் அதற்கெல்லாம் அஞ்சி பின்வாங்காமல், மீண்டும் ராஜநாகத்தின் தலை மீது முத்தமிடுகிறார். இந்தமுறை ராஜநாகம் சீறாமல் அமைதியாக இருக்கிறது.

    ஒரு கடியில் வளர்ந்த முழு யானையே சாய்க்க கூடிய சக்தி கொண்ட கிங் கோப்ராவுடன் பிரையன் பார்சிக் கொஞ்சி விளையாடும் இந்த காட்சிகள் இணையத்தில் தாறுமாறுவைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி 147,000க்கும் அதிகமான பார்வைகளையும், 13,000க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் 8 அடி நீளமுள்ள ராஜநாகத்திற்கு நேருக்கு நேர் நின்று முத்தமிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: America, King cobra, Trending, Viral Video

    அடுத்த செய்தி