Home /News /trend /

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்த நபர் உயிர் தப்பிய அதிசயம் - வைரலாகும் வீடியோ!

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்த நபர் உயிர் தப்பிய அதிசயம் - வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | ரயில் நிலையத்தில் சமீபத்தில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    சோஷியல் மீடியாக்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றுள் சில நெட்டிசன்களின் மனதை கவரும், சில நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும். சமீபத்தில் வைரலாகி வரும் இரண்டாவது ரக வீடியோவை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

    பொதுவாக பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது அதை இயக்குபவர்கள் மட்டுமல்ல பயணிகளாகிய நாமும் ஒவ்வொரு நொடியும் கவனமாக இருப்பது அவசியம். ஏனென்றால் ஒருசில வினாடிகள் நாம் காட்டும் அலட்சியம் அல்லது செய்யும் ரிஸ்க்கான செயல் நம் ஒட்டுமொத்த வாழ்வை ஆபத்தில் ஆழ்த்தி விடும். உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் சமீபத்தில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம் ஒன்று நடந்தது.

    தண்டவாளத்தில் ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ரயில் நிலையத்தின் நடை மேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி கொண்டார் ஒரு நபர். ரயில் கடந்து செல்லும் வரை அந்த நபருக்கு எதுவும் ஆகி விட கூடாது என்ற பதைபதைப்பில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரும் கீழே சிக்கி கொண்ட நபரை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர். இறுதியில் அதிர்ஷ்டவசமாக ரயில் முழுவதும் அவரை கடந்து சென்றதால் குறிப்பிட்ட நபர் சிறு காயங்கள் கூட ஏற்படாமல் உயிர் தப்பினார். ரயிலில் அடிபடாமல் உயிர் பிழைப்பாரா என்று காத்திருந்த பயணிகள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

    Read More : ஆண்கள் அனுபவித்த பிரீயட்ஸ் வலி.. அலறியடித்து ஓடிய இன்ஸ்டா பிரபலம்.. வைரலாகும் வீடியோ


    இந்த மயிர்க்கூச்செறியும் சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் பர்தானா ரயில் நிலையம் வழியே இன்டர்சிட்டி ரயில் ஓடுவதைக் காணலாம். குறிப்பிட்ட நபர் ரயிலில் ஏற முயன்ற போது நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையே இருந்த இடைவெளியில் தவறி விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

    ரயில் சென்ற பிறகு நடைமேடையை ஒட்டியவாறு கீழே படுத்திருந்த அவர் எழுந்து நடைமேடையில் இருக்கும் பயணிகளுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து விட்டு அருகில் கிடந்த தனது பைகளை எடுத்து செல்லும் வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், நல்லவேளை ரயிலில் அடிபடாமல் தப்பி விட்டார் என்ற நிம்மதியை தருகிறது. பர்தானா ரயில்நிலையத்தின் பிளாட்பாரம் நபர் 2-ல் ஆக்ரா சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி ரயில் வந்த போது தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையில் ரயிலில் பயணிக்க வந்த நசிர்பூர் போஜா என்ற கிராமத்தில் வசிக்கும் 30 வயதான போலா சிங் தான், ரயில் ஏறும் முயற்சியின் போது கீழே விழுந்த நபர் என்பது பின்னர் தெரிய வந்தது.



    சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மூலம் திபியாபூருக்கு செல்ல பர்தானா நிலையத்திற்கு வந்த போது தவறி கீழே விழுந்து விட்டதாக கூறி இருக்கிறார் போலா சிங். மேலும் கீழே விழுந்ததும் நடைமேடையின் கீழ் சுவரின் ஆதரவுடன் ரயில் கடந்து செல்லும் வரைமுழு கவனத்துடன் கை, கால்களை அசைக்காமல் படுத்து உயிர் தப்பியதாக தான் பிழைத்த திக்திக் வினாடிகள் பற்றி கூறி இருக்கிறார் போலா சிங்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Uttar pradesh, Viral Video

    அடுத்த செய்தி