Home /News /trend /

நாட்டுப்புற நடனமாடிய ஸ்பைடர்மேன்.. பலரையும் ஆச்சரிப்படவைத்து வைரலாகும் வீடியோ!

நாட்டுப்புற நடனமாடிய ஸ்பைடர்மேன்.. பலரையும் ஆச்சரிப்படவைத்து வைரலாகும் வீடியோ!

நாட்டுப்புற நடனமாடிய ஸ்பைடர்மேன்

நாட்டுப்புற நடனமாடிய ஸ்பைடர்மேன்

Spider Man Dance : மேற்கு வங்காளத்தில் உள்ள உள்ளூர் சந்தையில் நடந்த நாட்டுப்புற நடன நிகழ்ச்சியில் ஸ்பைடர் மேன் உடையணிந்த நபர் நடனமாடி அசத்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kolkata, India
    மேற்குவங்கத்தில் ஸ்பைடர் மேன் உடையணிந்த நபர் நாட்டுப்புற கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ஹாலிவுட் படங்களில் ஏலியன்கள் மற்றும் அரக்கர்களிடம் இருந்து மக்களைக் காப்பதற்காகப் போராடிய ஸ்பைடர் மேன், நாட்டுப்புறப் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உடனே உண்மையான ஸ்பைடர் மேன் என நினைத்துவிடாதீர்கள், இது மேற்கு வங்கத்தில் ஸ்பைடர்மேன் வேடமிட்டு நடனமாடும் ஒருவரின் வீடியோவிற்கு தான் அவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

    அந்த வீடியோவில், மேற்கு வங்காளத்தில் உள்ள சோனாஜுரி, போல்பூரில் உள்ள உள்ளூர் சந்தையில் விற்பனை ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அங்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் பராம்பரிய உடையணிந்த பெண்கள், தலையில் கலசத்தை வைத்துக்கொண்டு நாட்டுப்புற இசைக்கு ஏற்றார் போல் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்பைடர் மேன் உடை அணிந்திருக்கும் நபரும் அவர்களைப் போலவே வட்ட வடிவில் சுற்றி, சுற்றி கைகளைத் தட்டியும், இடுப்பை அசைத்தும் அவர்களைப் போலவே நடனமாடினார். பின்னணியில் சந்தாலி என்ற பாரம்பரிய இசை ஒலிக்கிறது. இதைச் சுற்றி இருக்கும் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு, வீடியோவாகவும் ரெக்கார்டு செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.

    நாட்டுப்புற நடனமாடிய ஸ்பைடர்மேன்


    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியான கொஞ்ச நேரத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘கொல்கத்தா இல்யூஷன்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்கு செய்துள்ளனர். வேடிக்கையாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ பல கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    நாட்டுப்புற நடனமாடிய ஸ்பைடர்மேன்


    குறிப்பாக இன்ஸ்டாகிராம் யூஸரில் ஒருவர், ‘தயவு செய்து எங்கள் இந்திய  கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைக் கேவலப்படுத்தாதீர்கள்’ என  பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ ஸ்பைடர் மேன் உடையில் இருக்கும் நபர் ஷூவுக்கு பதிலாக  செப்பல் அணிந்திருப்பதை  கூட கவனித்து  பதிவிட்டுள்ளார்.

    Also Read : புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு தினம் இன்று! இந்த நாளின் வரலாறு மற்றும் குறிக்கோள்

    சிலரோ “இது உண்மையான டாம் ஹாலண்ட் தானா?.. இது உங்களுடைய இந்திய வருகையா?” என நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோவுக்கு எதிர்ப்பும், வரவேற்பும் குவிந்து வருவதால் வெளியிட்டுப் பல நாட்கள் ஆனாலும், இன்று வரையிலும் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Dance, Viral Video

    அடுத்த செய்தி