• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கேஷ் கவுண்டர் நாற்காலியில் அமர்ந்திருந்த போதே மரணம் - பதறவைக்கும் காட்சிகள்

கேஷ் கவுண்டர் நாற்காலியில் அமர்ந்திருந்த போதே மரணம் - பதறவைக்கும் காட்சிகள்

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

ஹோட்டலில் கேஷ்கவுண்டரில் வேலை பார்த்து கொண்டிருந்தவர் நாற்காலியில் அமர்ந்தவாறே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
    ஹோட்டலில் கேஷ்கவுண்டரில் வேலை பார்த்து கொண்டிருந்தவர் நாற்காலியில் அமர்ந்தவாறே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹோட்டலில் கேஷ்கவுண்டரில் வாடிக்கையாளர்களிடம் பில்களை வசூலித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு நாற்காலியில் உயிரைவிட்டுள்ளார். சில நிமிடங்களுக்கு பணம் வசூலித்து கொண்டிருந்தவர் உயிரிழந்த நிகழ்வு அங்கு வேலை பார்த்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

    ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தில் உள்ள ஒரு உணவகத்தின் கேஷ் கவுண்டரில் அமர்ந்து வழக்கம் போல் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டிருந்தார். வாடிக்கையாளரின் பில்லைப் பார்த்து அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மீதிப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் இருந்து வேலை தொடங்குகிறது. உணவகமும் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிந்தது, ஒவ்வொரு சில நொடிகளுக்கும் புதிய வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த கவுண்டருக்கு வந்துகொண்டிருந்தனர். வழக்கம் போல் அவர்களிடமிருந்து பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு மீதி பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே வேலை பார்த்துள்ளார்.



    வாடிக்கையாளருக்கு பணம் செலுத்திய பிறகு அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை வீடியோ காட்டுகிறது. அந்த நபர் தனது நாற்காலியில் சாய்ந்த நிலையில் சுயநினைவை இழக்கிறார். சிறிது நேரம் கழித்து, அவர் நாற்காலியில் இருந்து சரிந்தார். அங்கு வந்த வாடி்கையாளர் ஒருவர் அவர் ஓய்வெடுப்பது போல் நினைத்து கொள்கிறார். எதிரில் நிற்கும் வாடிக்கையாளரும் அந்த நபரிடம் பணத்தை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார். அப்போது திடீரென அந்த நபர் நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார். முன்பணம் கொடுக்க நின்ற வாடிக்கையாளர் பதற்றத்துடன் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார். கீழே விழுந்த நபருக்கு மற்றொரு வாடிக்கையாளர் வந்து உதவ முயற்சிப்பதை வீடியோ காட்டுகிறது.

    ஆனால் அந்த நபர் மாரடைப்பு காரணமா இறந்துவிடுகிறார். அந்த நபர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் போலிஸார் தெரிவித்தனர். இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: