HOME»NEWS»TREND»a maggi food counter at this wedding is how twitter wants every marriage celebration to be vin ghta
திருமண விழாவில் போடப்பட்ட 'maggi' ஸ்டால் - ட்விட்டரில் வைரலாகும் வீடியோ!
திருமணத்தை வீட்டில் இருந்தபடியே உணரும் பொருட்டு, சமீபத்தில் ஒரு தம்பதி தங்கள் உறவினர்களுக்கு உணவினை அவர்களது வீட்டிற்கே டோர் டெலிவரி செய்துள்ளனர். புதுமண தம்பதிகளை வீட்டில் இருந்தபடியே அவர்களது உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து திருமண விழாவை பாதுகாப்பாக கொண்டாடியுள்ளனர்.
திருமணத்தை வீட்டில் இருந்தபடியே உணரும் பொருட்டு, சமீபத்தில் ஒரு தம்பதி தங்கள் உறவினர்களுக்கு உணவினை அவர்களது வீட்டிற்கே டோர் டெலிவரி செய்துள்ளனர். புதுமண தம்பதிகளை வீட்டில் இருந்தபடியே அவர்களது உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து திருமண விழாவை பாதுகாப்பாக கொண்டாடியுள்ளனர்.
திருமண (Marriage) விழாக்கள் என்றாலே உறவினர்கள் ஒன்றுகூடி மணமக்களை வாழ்த்தும் ஒரு அழகிய தருணம். இது போன்ற விழாக்களில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது விருந்தினர் உபசரிப்பு. அறுசுவை உணவுகள் (Food) இல்லாமல் திருமண விழா என்பது பூர்த்தியடையாது. ஒவ்வொரு திருமண விழாவிலும், இட்லி, தோசை, பொங்கல், பூரி, பிரியாணி, சாப்பாடு, சாம்பார், ரசம், பொரியல் அவியல் என பாரம்பரிய முறையில் உணவுகள் பரிமாறப்படுவது வழக்கம். கூடுதலாக குழந்தைகள் அதிகம் விரும்பும் வகையில் பாப்கார்ன் ஸ்டால், ஐஸ்கிரீம் ஸ்டால், பலூன் ஸ்டால், பெரியவர்களுக்காக டீ ஸ்டால் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இங்கு ஒரு திருமண விழாவில் போடப்பட்டிருந்த "Maggi" ஸ்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபத்தில் வட மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் விருந்தினர்களுக்காக ஒரு தனித்துவமான 'Maggi' உணவு கவுண்டரை வைத்திருந்தது ஆன்லைன் உலகத்தில் வைரலாகி உள்ளது. இதன் மூலம் maggi இன்ஸ்டன்ஸ் நூடில்ஸ் அனைத்து இந்தியர்களிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு பாஸ்ட் புட் உணவாக திகழ்கிறது.
திருமண நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட மேகி நூடில்ஸ் ஸ்டால் புகைப்படத்தை சோமிய லகானி என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, " எனது கசின் அவருடைய திருமண விழாவில் இதுபோன்று நூடில்ஸ் கவுண்டரை வைத்ததற்கு அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
I love my cousin for being so thoughtful & ensuring there is a Maggi counter at her wedding tonight ❣️🤣 pic.twitter.com/Yu3ObLEYMf
அவரது பதிவு அதிக யூசர்களால் ரீட்வீட் செய்யப்பட்டது. எண்ணற்றோர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதில் ஒருவர், இந்த மேகி கவுண்டர் திருமணத்தில் மிகவும் பிரபலமான கவுண்டராக இருந்திருக்கக் கூடும் என ரீட்வீட் செய்திருந்தார். மேலும் மற்றொரு நபர், எல்லா திருமணங்களிலும் இதுபோன்று மேகி ஸ்டால் இருக்க வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். அவர்களின் பதிவுகள் மூலம் இந்திய மக்கள் maggi நூடில்ஸை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் சிலர் திருமணம் நடக்கும் இடத்தை தெரிந்து கொண்டு, திருமண விழாவில் பங்கேற்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்து வந்தனர். கொரோனா தொற்று உலகெங்கிலும் பரவியுள்ள இந்த காலகட்டத்தில், முன்பு போல இல்லாமல் குறைந்த உறவினர்களை வைத்தே திருமண விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெருந்தொற்றால் வணிகங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதோ திருமண விழாக்களும் பாதிக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆயிரம் பேர் கூடி நடத்தப்படும் விழாக்கள், ஊரடங்கு காரணமாக சுமார் 20 பேர் மட்டும் கலந்து கொண்ட திருமணங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளன.
போக்குவரத்து தடை செய்யப்பட்ட காலத்தில் சில திருமணங்கள் விர்ச்சுவல் மூலமாக கூட நடந்தன. அதேபோல, திருமண விழாக்களில் பங்கேற்க முடியாத உறவினர்கள் விர்ச்சுவல் மூலம் கண்டு களித்தனர். திருமணத்தை வீட்டில் இருந்தபடியே உணரும் பொருட்டு, சமீபத்தில் ஒரு தம்பதி தங்கள் உறவினர்களுக்கு உணவினை அவர்களது வீட்டிற்கே டோர் டெலிவரி செய்துள்ளனர். புதுமண தம்பதிகளை வீட்டில் இருந்தபடியே அவர்களது உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து திருமண விழாவை பாதுகாப்பாக கொண்டாடியுள்ளனர்.