2,400 கி.மீ பயணம் செய்து காதலியைப் பார்க்கச் சென்ற காதலன்! வேறு ஒருவருடன் பார்த்து அதிர்ச்சி

காதலிக்கு ஆச்சர்யமளிப்பதற்காக, கரடி போன்ற உடையணிந்து முகத்தை மூடியிருந்தான் அவன். அப்போது, அந்தப் பெண் வேறு ஒருவனுடன் இருந்துள்ளார்’

news18
Updated: July 22, 2019, 8:02 PM IST
2,400 கி.மீ பயணம் செய்து காதலியைப் பார்க்கச் சென்ற காதலன்! வேறு ஒருவருடன் பார்த்து அதிர்ச்சி
மாதிரிப் படம்
news18
Updated: July 22, 2019, 8:02 PM IST
சீனாவிலிருந்து ஜப்பானுக்கு 2,400 கி.மீ தூரம் பயணம் செய்து தன் காதலியைப் பார்க்கச் சென்ற காதலன், வேறு ஒருவருடன் காதலி இருந்ததைப் பார்த்து மனம் வெறுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜப்பானில் ஜூலை 19-ம் தேதி டி.ரேடியோசாண்டி என்பவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டப்பட்ட ட்விட் மிகவும் வைரலாகியுள்ளது. அந்த ட்விட்டை சுமார் 20,000 பேர் ரீட்விட் செய்துள்ளனர். 80,700 பேர் அந்த ட்வீட்டை லைக் செய்துள்ளனர்.

அந்த ட்விட்டில், ‘தனது காதலிக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக சீனாவிலிருந்து 2,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றான் அவன். காதலிக்கு ஆச்சர்யமளிப்பதற்காக, கரடி போன்ற உடையணிந்து முகத்தை மூடியிருந்தான் அவன். அப்போது, அந்தப் பெண் வேறு ஒருவனுடன் இருந்துள்ளார்’என்று பதிவிட்டுள்ளார்.

 அந்தக் காட்சியை விவரிக்கும் விதமாக சில மாதிரிப் படங்களையும் பதிவிட்டிருந்தார். அவருடைய பதிவு படிப்பவர்களின் மனதை உருக்கும் வகையில் இருந்ததால், அவருடைய ட்வீட் நெட்டீசன்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Also see:

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...