ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

”லேப்டாப் அழுக்காக இருக்குப்பா” தண்ணீர் ஊற்றி கழுவிய சிறுமி - வீடியோ இணையத்தில் வைரல்!

”லேப்டாப் அழுக்காக இருக்குப்பா” தண்ணீர் ஊற்றி கழுவிய சிறுமி - வீடியோ இணையத்தில் வைரல்!

வீடியோ இணையத்தில் வைரல்!

வீடியோ இணையத்தில் வைரல்!

சீனாவை சேர்ந்த சிறுமி செய்த வேலையை சிறிய வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ள நிலையில், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Internationa, IndiaChina

  குழந்தைகள் என்றாலே சேட்டையின் முழு அடையாளம் என்றே கூறலாம். சில நேரங்களில் அவர்கள் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படியாகவும், சில நேரங்களில் உச்சகட்ட கோபத்தை நமக்கு ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடும். அதிலும் இன்றைய குழந்தைகளைப் பற்றி வார்த்தைகளால் சொல்லத் தேவையில்லை. நமக்கே தெரியும். அவர்கள் பேசும் குறும்புத்தனமான பேச்சுகள், அறிவுப்பூர்வமான சிந்தனைகள், விளையாடுவது போன்று பேசுவதைக் கவனிக்கும் திறன் என பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளனர் இன்றைய குழந்தைகள்.

  அதிலும் பெற்றோர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பெரும் பிரச்சனைகளில் முடிந்துவிடுகிறது. அப்படித் தான் தற்போது இணையத்தில் வைரலாகும் சீன குழந்தையின் சிறுமியின் வீடியோ ஒன்று. அதில் அப்படி என்னதான் இருந்தது? என்பது குறித்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

  லேப்டாப்பை தண்ணீரில் போட்டு கழுவிய குழந்தை…

  சீனாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. வழக்கம் போல காலையில் அனைவரும் சாப்பிட அமர்ந்த நேரத்தில், சில விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமியின் தந்தை, தன்னுடைய லேப்டாப் மிகவும் அழுக்காக மாறிவிட்டது என்றும் ஏதாவது செய்ய வேண்டும் என எதார்த்தமாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். தந்தை மற்றும் தாய் பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அந்த சிறுமி தன்னுடைய அப்பாவிற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

  Read More : வெயிலில் சென்றால் நிறம் மாறும் வெள்ளை நிற ஆடை.. வைரலாகும் மேஜிக் டிரஸ் வீடியோ!

  அப்போது தனது தந்தை தூங்கியவுடன், அவரது லேப்டாபை சுத்தம் செய்வதற்காக எடுத்துள்ளார். ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் நிரப்பி சர்ப் போட்டு நன்றாக கலக்கிக் கொண்டார். பின்னர் அதனுள் அழுக்காக இருந்த தந்தையின் லேப்டாபை உள்ளே போட்டு துவைத்து எடுத்துவிட்டார். இந்நிலையில் தான் ஏதோ சத்தம் கேட்கிறது என்று பார்த்தப் போது, தாய் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டார்.

  உடனே கோபத்தில் ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்ட போது, அப்பா தான் லேப்டாப் அழுக்காக இருக்குன்னு சொன்னாரு, அதான் அவருக்கு உதவி செய்ய நான் தண்ணீர் ஊற்றி கழுவுகிறேன் என்கிறார். குழந்தை இவ்வாறு பேசியதைக் கேட்ட தாய், என்ன செய்வது என்று திகைத்து நின்றார். விலை உயர்ந்த லேப்டாப்பை இப்படி ஏன் செய்தாய் என்று கூட கேட்க முடியவில்லை. அந்தளவிற்கு புத்திசாலித்தனமாக சிறுமி செய்திருந்தது பெற்றோர்களை வியப்பில் ஆழ்த்தியது.

  சீனாவை சேர்ந்த சிறுமி செய்த வேலையை சிறிய வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ள நிலையில், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் தந்தையின் சொல்லை மீறாத குழந்தை, க்யூட் சிறுமி என்பது போன்ற கருத்துக்களையும் இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral