ரூ.250 க்கு ஆசைப்பட்டு ரூ.50,000 த்தை பறிக்கொடுத்த பெண்.. இந்த தப்ப நீங்க பண்ணாதீங்க..

ரூ.250 க்கு ஆசைப்பட்டு ரூ.50,000 த்தை பறிக்கொடுத்த பெண்.. இந்த தப்ப நீங்க பண்ணாதீங்க..

ஆன்லைன் ஆர்டர்

பெங்களூரில் வசித்து வரும் பெண் ஒருவர் உணவு ஆர்டர் செய்வதில் ரூ.250 க்கு ஆசைப்பட்டு ரூ.50,000 பணத்தை பறிக்கொடுத்துள்ளார்.

 • Share this:
  கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சவீதா சர்மா என்ற 58 வயதான பெண். இவர் தினமும் தனக்கு பிடித்த உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது தான் வழக்கமாம். அந்த வகையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் உணவு ஆர்டர் பற்றி கொடுக்கப்பட்டிருந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.

  அதில் ரூ.250 க்கு சாப்பாடு வாங்கினால் மற்றொரு சாப்பாடு இலவசம் என்று விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்த சர்மா அதில் கொடுக்கப்பட்ட போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். அவர்கள் ஆர்டர் செய்வதற்கு நீங்கள் முதலில் 10 ரூபாய் செலுத்தினால் போதும், மீதமுள்ள பணத்தை டெலிவரி பாயிடம் கொடுக்கலாம் என்று கூறி வெப்சைட் லிங்க் ஒன்றை அனுப்பி ஏடிஎம் கார்ட் நம்பர், ஏடிஎம் பின் நம்பர், போன் நம்பர் போன்றவற்றை நிரப்ப சொல்லியுள்ளனர். இவரும் அவர்கள் கூறிய படியே விவரங்களை நிரப்பி அனுப்பி வைத்துள்ளார். உடனே சர்மாவின் மொபைலுக்கு ரூ.49,996 எடுக்கப்பட்டு உள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.

  இந்த மெசேஜை பார்த்து பதறிப்போன சவீதா சர்மா வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருந்த போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. இது ஒரு போலியான கும்பல் என்பதை அறிந்த சவீதா சர்மா இதுகுறித்து பெங்களூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தெரியாதவர்களிடம் ஏடிஎம் பின் நம்பர் போன்றவற்றை ஷேர் செய்யவேண்டாம் என காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும்,சிலர் அறியாமையினால் இப்படி செய்வது ஆன்லைன் மூலம் பணம் திருடுபவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: