ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அந்தரத்தில் தொங்கிய தாயை காப்பாற்ற சூப்பர் ஹீரோவாக மாறிய சிறுவன்..! வைரல் வீடியோ

அந்தரத்தில் தொங்கிய தாயை காப்பாற்ற சூப்பர் ஹீரோவாக மாறிய சிறுவன்..! வைரல் வீடியோ

தாயை காப்பாற்ற ஏணியை நகர்த்தும் சிறுவன்

தாயை காப்பாற்ற ஏணியை நகர்த்தும் சிறுவன்

தன்னுடைய தாய்க்கு எதுவும் பெரிய விபத்து நேர்ந்து விடக்கூடாத என்பதற்கான சிறுவன் மேற்கொண்ட செயல் வீடியோவாக டிவிட்டரில் வெளியானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகள் மற்றும் தாயின் உறவு என்பது மிகவும் அற்புதமான மற்றும் புனிதமான விஷயம். என்ன தான் மற்றவர்கள் குழந்தையை பேணிப் பராமரித்து வளர்த்தாலும் தாய் இல்லையென்றால் அக்குழந்தைக்கு எதுவுமே இருக்காது.10 மாதம் கருவறையில் சுமந்து, எப்படியெல்லாம் சமூகத்தில் பயணிக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கும் தன் தாயின் உயிருக்கு எதுவும் நேர்ந்தால் அவர்கள் சும்மா இருக்க முடியுமா என்ன? ஒரு 4 வயது குழந்தை ஒன்று தன்னுடைய சமயோஜித்த புத்தியினால் தனது தாயினை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடம் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. 

மழலைக்குழந்தைகளின் க்யூட் வீடியோக்கள், அம்மாவிடம் சண்டைப் போடும் காட்சிகள், வித்தியாசமாக மேற்கொள்ளும் அவர்களின் செயல்திறன்கள்  இணையத்தை ஆக்கிரமிக்கும். பெரியவர்கள் மேற்கொள்ளும் சாகசங்களை விட குழந்தைகள் மேற்கொள்ளும் சாகசங்கள் தான் இணையவாசிகளை வெகுவாகக் கவரும். இதுப்போன்று தான் தற்போது வைரலாகும் வீடியோவிலும். அதில் ஒரு தாய் கேரேஜ் கதவை சரிசெய்வதற்காக ஒரு ஏணியில் ஏறியுள்ளார். அதற்கு அருகிலேயே அவருடைய குழந்தை நின்றுக் கொண்டு தன்னுடைய அம்மா, என்ன? மற்றும் எப்படி சரிசெய்கிறார்? என பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது தான் கீழே இறங்க முயற்சி செய்த போது ஏணி தவறி கீழே விழுந்துவிட்டது. பின்னர் இரு கைகளால் தொங்கி கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து சிறுவன் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து எப்படியாவது தனது அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்கான பெரிய ஏணி நகர்த்தி வைக்க முடிவெடுத்தார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மேலே தொங்கி கொண்டிருந்த தாயை காப்பாற்ற வேண்டும் என முனைப்போடு, பெரிய ஏணியை நகர்த்தினார். விபத்தில் சிக்கியிருந்த தாயும் தனது குழந்தை கொண்டுவரும் ஏணியைக் காலால் பிடித்து தனக்கு வசமாக வைத்துக் கொண்டார். பின்னர் ஏணியின் ஒருபுறம் வழியாக இறங்க முயற்சி செய்த போது, மற்றொரு பக்கத்தில் இருந்து ஏணியைப் பிடித்துக் கொண்டிருந்தார் அச்சிறுவன்.

தன்னுடைய தாய்க்கு எதுவும் பெரிய விபத்து நேர்ந்து விடக்கூடாத என்பதற்கான சிறுவன் மேற்கொண்ட செயல் வீடியோவாக டிவிட்டரில் வெளியானது. வீடியோ வெளியிடப்பட்டதிலிருந்து 95,000 பார்வைகளைப் பெற்றுள்ளதோடு மேலும் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. மேலும் இது கடவுளின் குழந்தையாகத் தான் இருக்க முடியும் எனவும் தன்னுடைய அம்மாவின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை இந்த ஒரு வீடியோ வெளிப்படுத்துகிறது என நெட்டிசன்கள் இக்குழந்தையை புகழ்ந்துள்ளனர். மேலும் இக்குழந்தை எப்போதும் நலமுடன் இருக்க வேண்டும், எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்பது போன்ற கருத்துக்களையும் டிவிட் செய்துள்ளனர்.

First published:

Tags: Trending, Viral Video