Home /News /trend /

வீட்டை விற்று கடனை அடைக்க முயன்ற கேரள நபருக்கு ரூ.1 கோடி லாட்டரி பரிசு.!

வீட்டை விற்று கடனை அடைக்க முயன்ற கேரள நபருக்கு ரூ.1 கோடி லாட்டரி பரிசு.!

Lottery Prize

Lottery Prize

Lottery Prize | கேரளாவை சேர்ந்த முகமது என்ற மஞ்சேஸ்வரத்தில் உள்ள ஒரு பெயிண்டர் கடனை அடைப்பதற்காக தான் ஆசைஅசையாக கட்டிய வீட்டை விற்கவிருந்தபோது அவருக்கு ரூ.1 கோடி லாட்டரி வென்ற செய்தி வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அதிர்ஷ்டத்தை நம்பவே முடியாது, அதாவது ரஜினி ஸ்டைலில் சொல்லவேண்டுமானால் அது எப்ப வரும் எப்டி வரும்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்டா வந்துரும்னு தான் சொல்லனும்.

இதில்கூட இப்படியான ஒரு விஷயம்தான் நடந்தது. பெயிண்டர் ஒருவர் தனது வீட்டை விற்றால் அவருக்கு
ரூ. 50 லட்சம் கிடைக்கும் என்பதால் தான் இதுவரை சம்பாதித்த பணத்தில் கட்டிய தனது கனவு இல்லத்தை விற்க தயாரானார். இருப்பினும், அவரது அதிர்ஷ்டம் மிக சரியான நேரத்தில் பிரகாசித்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அவர் லாட்டரியில் ரூ.1 கோடி ஜாக்பாட் வென்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தார். கேரளா ஸ்டேட் லாட்டரி மூலம் லாட்டரி பரிசை முகமது வென்றார்.

முகமது குடும்பத்தில் அவரது மனைவி, அண்ணி மற்றும் நான்கு மகள்கள், ஒரு மகன் உட்பட ஐந்து குழந்தைகளையும் சேர்த்து மொத்தம் எட்டு பேர். தற்போது இவர்களில் இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. தனது மகள்களின் திருமணம் முடிந்து, வீடு கட்டும் பணியும் முடிந்த நிலையில் இவர் 50 லட்சம் ரூபாய் கடனாளியாக ஆனார்.

எனவே, இந்த கடனை அடைக்கும் நோக்கத்தில் தனது குடும்பத்திலுள்ள ஒரே மதிப்புமிக்க சொத்தான தனது வீட்டை விற்றுவிட்டு தனது குடும்பத்துடன் வாடகை வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். ஆதலால் திங்களன்று அவர் தான் புதிதாகக் கட்டிய 2,000 சதுர அடி கொண்ட வீட்டிற்கான முன்பணத்தை டோக்கனாக வாங்க விருந்தபோது, தான் சில நிமிடங்களுக்கு முன், மிகப்பெரிய பரிசை வென்றது முகமதுவுக்குத் தெரியவந்தது.தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் உரையாடலில் தனது நேர்மையை வெளிப்படுத்தும் விதமாக “நான் எங்கள் வீட்டைக் காப்பாற்ற முடிந்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. கடந்த நான்கு மாதங்களாக, நாங்கள் அனைவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். வருமானம் குறைவாக இருந்ததால் கடனை அடைக்க முடியவில்லை” இவ்வாறு கூறியிருந்தது.

Also Read : பபுள் கம்மை மென்று ரூ.67,000-க்கும் மேல் சம்பாதிக்கும் இளம்பெண் - எப்படி தெரியுமா?

கடந்த நான்கு மாதங்களாக அவர் அதிக நம்பிக்கையுடன் லாட்டரி சீட்டுகளை வாங்கியதாகவும் தெரிவித்தார். அவர் மேலும், “அதிர்ஷ்டம் தனது துயரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தான் கடந்த நான்கு மாதங்களாக லாட்டரிகளை வாங்கி குவித்தேன் எனவும், தான் வங்கிகள் மற்றும் உறவினர்களிடம் பணம் வாங்கியுள்ளதாகவும், மேலும், இதை கத்தாரில் உள்ள தனது மகனுக்கு அனுப்ப எண்ணி தான் இந்த கடன் வாங்கியதாகவும் கூறினார்.

Also Read : பூமியில் கடைசி மனிதனின் செல்பி எப்படி இருக்கும்? செயற்கை நுண்ணறிவு வழங்கிய அதிர்ச்சி படங்கள்

இருப்பினும், தரகர்கள் அவரது வீட்டிற்கு வந்தபோது, ​​​​முகமது ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினார். வெற்றிபெற்ற இந்த லாட்டரி சீட் ஹோசங்கடியிலுள்ள (Hosangadi) அம்மா லாட்டரி ஏஜென்சியில் இருந்து வாங்கப்பட்டதாகவும், இதில் அவருக்கு வரி விலக்குகளுக்கு பிறகு, சுமார் ரூ. 63 லட்சம் கிடைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Kerala, Lottery, Trending

அடுத்த செய்தி