ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கொரோனா பரவலை தவிர்க்க ஒரு முழு விமானத்தையே பதிவு செய்த இந்தோனேசிய ஜோடி!

கொரோனா பரவலை தவிர்க்க ஒரு முழு விமானத்தையே பதிவு செய்த இந்தோனேசிய ஜோடி!

காட்சி புகைப்படம்

காட்சி புகைப்படம்

கொரோனா பரவலை தடுக்க இந்தோனேஷியா ஜோடிகள் வித்யாசமான முயற்சியை மேற்கொண்டு அனைவரையும் அசர வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா எனும் கொடிய நோய் நம் வாழ்வில் நுழைந்து ஒரு வருடம் ஆகிறது. கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பயங்கரத்தை தவிர பல வினோதமான விஷயங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் ஒரு முழு விமானத்தையும் தங்கள் பயணத்திற்காக முன்பதிவு செய்வது போல வினோதமான விஷயம் எதுவும் ஏற்படவில்லை. நாவல் கொரோனா வைரஸ் நம்மைச் சுற்றிக் கொண்டிருப்பதால் பயணம் என்பது இன்னும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஜகார்த்தாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா காலங்களில் பயணம் செய்வதை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். 

இது தொடர்பாக Mashable SE Asia வெளியிட்ட அறிக்கையின்படி, ஜகார்த்தாவைச் சேர்ந்த ஒருவர், விமான பயணத்தின் போது தன்னையும் தனது துணையையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ஒரு செயலை செய்துள்ளார். ஜகார்த்தாவில் இருந்து பாலிக்கு செல்ல முழு விமானத்தையும் முன்பதிவு செய்துள்ளார் என குறிப்பிட்டிருந்தது. பிரபல ஜகார்த்தா சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவர் ரிச்சர்ட் முல்ஜாடி, இவர் கடந்த ஜனவரி 4ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாருமே இல்லாத ஒரு வெற்று விமானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் ஸ்டோரீஸாக பகிர்ந்து கொண்டார். 

அந்த பதிவில் அவர், "நான் முடிந்தவரை பல இடங்களை முன்பதிவு செய்துள்ளேன். இது தனியார் ஜெட்டை பெறுவதை விட மலிவானது.#LIFEHACKS" என்ற கேப்ஷனுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது இன்னொரு இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது, "விமானத்தில் எங்களை தவிர்த்து யாரும் பயணிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. ஒருவேளை வேறு யாராவது இருந்திருந்தால் எங்கள் பயணத்தை கேன்சல் செய்திருப்போம். bye.Ghost Ship." என பதிவிட்டிருந்தார்.

என்னதான் இருந்தாலும், இந்த லைஃப் ஹேக்கிற்கு கொஞ்சம் அதிகமாகவே பணம் தேவைப்படுகிறது. கொரோனா வைரஸ் நோயைப் பற்றி இந்த தம்பதியினர் "சூப்பர் பாரனாய்ட்" கொண்டவர்களாக இருந்ததால் தான் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். முல்ஜாடி மற்றும் அவரது மனைவி ஷால்வின் சாங்குடன் வேறு எந்த நபரும் இல்லாத விமானத்தில் பயணம் செய்ததன் காரணமாகவே, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டதாக நம்புகின்றனர். முழு விமானத்தையும் முன்பதிவு செய்வதற்கான முல்ஜாடியின் கூற்று பாட்டிக் ஏர் வைத்திருக்கும் லயன் ஏர் குழுமத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்த ஜோடி ஜகார்த்தாவிலிருந்து பாலியின் டென்பசார் வரை விமான ஐடி -6502 ஐ முன்பதிவு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Flight, Indonesia