இறந்த பாம்பை பிடித்து ’ஸ்கிப்பிங்’ விளையாடும் சிறுவர்கள்..! வைரல் வீடியோ

வியட்நாமில் இதுபோன்று சிறுவர்கள் விளையாடுவது சாதாரண விஷயமே என்று கமெண்டில் தெரிவிக்கின்றனர்.

இறந்த பாம்பை பிடித்து ’ஸ்கிப்பிங்’ விளையாடும் சிறுவர்கள்..! வைரல் வீடியோ
பாம்புடம் விளையாடும் சிறுவர்கள்
  • News18
  • Last Updated: November 19, 2019, 6:52 PM IST
  • Share this:
வியட்நாமில் சிறுவர்கள் இறந்த நீளமான பாம்பை பிடித்துக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுவர்கள் மூவரும் சாதாரணமாக இறந்த பாம்பை சுற்றி ஸ்கிப்பிங் விளையாடுகிறார்கள். அதை வீடியோ எடுக்கும் பெண்ணும் அவர்களை கண்டிக்காமல் ஊக்குவிக்கும் குரல் ஒலிக்கின்றது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிலர் வியட்நாமில் இதுபோன்று சிறுவர்கள் விளையாடுவது சாதாரண விஷயமே என்று கமெண்டில் தெரிவிக்கின்றனர். சிலர் பாம்பு இறந்திருந்தாலும் விஷம் தாக்கும். நோய்கள் வரும் ஆபத்து இருக்கிறது. சிறுவர்களை ஊக்குவிக்காதீர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.


First published: November 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்