பெண்கள் தங்கள் துணையின் ஊதியத்தை நம்பி இல்லத்தரசிகளாக இருந்த காலம் போய் தங்கள் பார்ட்னரை சார்ந்து இருக்காமல் நிதி ரீதியாக பெண்கள் தற்போது சுதந்திரமாக உள்ளனர். இருப்பினும் இங்கிலாந்தை சேர்ந்த சம்மர் ஹாக்கின்ஸ் (Summer Hawkins) என்ற 28 வயதான இளம்பெண் தற்காலத்து பெண்களை போலல்லாமல் அப்படியே ரிவர்ஸில் செயல்பட்டுள்ளார். ஆசிரியையாக வேலை பார்த்து வந்த சம்மர் ஹாக்கின்ஸ் பொருளாதார ரீதியாக கவலைகள் ஏதும் இன்றி வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் செய்வதற்காக 'stay-at-home girlfriend'ஆக மாறி இருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இது ஒரு ஒரு புதிய டிக்டாக் டிரெண்டாக உருவெடுத்து வருகிறது. stay-at-home girlfriend என்பது தம்பதியர் அல்லாதவர்கள் தாங்கள் விரும்பும் பார்ட்னருக்கு காலை எழுவது முதல் இரவு படுக்க போகும் வரை தேவையானதை செய்து கொடுத்து, வீட்டையும் பார்த்து பராமரிக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளும் பெண்களை குறிக்கிறது. பதிலுக்கு குறிப்பிட்ட இளம்பெண்ணை வீட்டோடு கேர்ள் ஃபிரெண்டாக வைத்திருப்பவர்கள் நிதி ரீதியாக அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது வழக்கமாகி வருகிறது.
சுருக்கமாக சொன்னால் நம் இந்தியாவில் இருக்கும் பல இல்லத்தரசிகளின் வாழ்க்கையை ஒத்ததாக இருக்கிறது இந்த stay-at-home girlfriend கான்சப்ட்.
Read More : கொசு கடித்தால் ‘கோமா’ வா?... 30 அறுவை சிகிச்சைக்கு உள்ளானவரின் சோகக் கதை
கடந்த 2021-ல் தற்செயலாக கிளப் ஒன்றில் இருவரும் மீட் செய்து வார இறுதியை ஜாலியாக பொழுதை கழித்த பிறகு ஆசிரியை வேலையை உதறிவிட்டு கிரிஸுடன் stay-at-home girlfriend-ஆக மாறி இருக்கிறார் ஹாக்கின்ஸ். மேலும் பணத்தை பற்றி கவலை கொள்ள தேவையில்லை நான் பார்த்து கொள்கிறேன் என்று பிக்ஸ் கிரிஸ் கூறியதை தொடர்ந்து தனது ஆசிரியை வேலையை விட்டுவிட்டு, லண்டன் வீட்டை காலி செய்து விட்டு, 400 மைல்களுக்கு அப்பால் ஸ்கட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஹாக்கின்ஸ் குடியேறிவிட்டார். இதனிடையே தனது stay-at-home girlfriend வாழ்கையை பற்றி பேசிய சம்மர் ஹாக்கின்ஸ், தினமும் காலை என் பாய் ஃபிரெண்ட்டிற்கு முன்பாக எழுந்து அவர் குளிக்க ஹீட்டரை ஆன் செய்து ஹாட் வாட்டரை ரெடி செய்து விடுகிறேன். இதனால் அவர் குளிக்க செல்லும்போது தண்ணீர் சூடாக இருக்கும். நாள் முழுவதும் சொந்த பிசினஸில் கவனம் செலுத்தும் கிரிஸிற்கு தேவையான காலை உணவுகளை வகைவகையாக சேமித்து கொடுப்பதாக கூறி இருக்கிறார்.
View this post on Instagram
கிரிஸ் வேலையில் பிசியாக இருக்கும் நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது, உணவுக்காக ஷாப்பிங் மற்றும் நாயை கூட்டி கொண்டு வாக்கிங் உள்ளிட்ட தினசரி வேலைகளில் கவனம் செலுத்துவதாக சம்மர் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார். பிக்ஸ் கிரிஸ் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் இங்கு பணம் செலவாகிறது என்பதை பற்றிய யோசனை அல்லது கவலை இல்லாமல் எனக்கு விரும்பியதை செய்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனினும் வீட்டிலேயே இருக்கும் பெண் தோழியாக இருப்பது எளிதான வேலை அல்ல, ஏனென்றால் இது உறவில் சமநிலையை கண்டறிவது பற்றியது. அவர் கோபத்தில் இருந்தாலும் கூட நான் மிகவும் கூலான நபர் என்பதால் எங்களது உறவு பாதிக்காது என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.