Viral Video: ’என்னா நடிப்புடா சாமி’ அம்மாவை போல் நடித்த சிறுமியின் வீடியோ வைரல்!

வைரல் வீடியோ

கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்த பெண் ஒருவரின் மகள், தனது தாய் வேலை செய்யும்போது கொடுக்கும் ரியாக்ஷனை இமிட்டேட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கொலின் சுலிஸ், கொரோனா காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் லிங்கிட் இன் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அதில், வீட்டில் இருந்து வேலை செய்யும் அவர், பணியின்போது எப்படியெல்லாம் ரியாக்ட் செய்வார் என கொலினின் 8 வயது மகள் அப்படியே நடித்துக் காட்டுகிறார். கியூட்டாக இருக்கும் இந்த வீடியோவை விளையாட்டாக பதிவு செய்த நிலையில், அவர் எதிர்பார்க்காத அளவுக்கு லட்சக்கணக்கானோர் ரசித்துள்ளனர்.

சிறுமி அடெல்லேவின் குறும்பு வீடியோ இதுவரை 15 மில்லியன் பார்வைகளையும், 5 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. 1.23 நொடிகள் இருக்கும் வீடியோவில், அடெல்லே முழு சேட்டைகளும் இடம்பெற்றுள்ளது. தாய் கொலின் அமரும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து கொள்ளும் அடெல்லே, தாய் வேகமாக டைப் செய்வதுபோலவும், அப்போது உடனடியாக போன் வந்தால் வீட்டில் இருப்பவர்களை சத்தம்போட வேண்டாம் என அதட்டுவதையும் பிசகாமல் நடிக்கிறார். மகளின் சேட்டைகளை கொலின் வீடியோவாக பதிவு செய்கிறார்.

யூ டியூப்பில் இந்த வீடியோ மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சிறுமி அடெல்லேவின் ஆக்ஷ்ன்கள் ரசிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ள நெட்டிசன்கள், கியூட்டாக தாயை அப்படியே இமிட்டேட் செய்திருப்பதாக கூறியுள்ளனர். மேலும் சிலர் அடெல்லேவின் வீடியோவுக்கு லைக்குகளை கொடுத்துள்ளதுடன், தான் வீட்டில் வேலை செய்வதைபோல அவர் செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர். இணையத்தில் இவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்காத கொலின் சுலிஸ், வியப்பின் உச்சத்துக்கே சென்றுள்ளார். இந்த வீடியோவை இவ்வளவு பேர் ரசிப்பார்கள் என தான் கனவிலும் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

Also read: ’நெகடிவ்’ கமெண்ட் கொடுத்த ரசிகர்களை Block செய்த சீரியல் நடிகை!

மகளின் வீடியோ வைரலானது குறித்து பேசிய கொலின் சுலிஸ், " ஒரு நாள் மாலை நேரத்தில் அடெல்லே என்னிடம் வந்து உங்களைப் போலவே நடித்துக் காட்டுகிறேன் எனக் கூறினாள். என்ன செய்வாள்? என்ற எதிர்பார்ப்புடன் ஓகே சொல்லிவிட்டேன். அவள் நடிப்பதை வீடியோவாக பதிவு செய்யத் தொடங்கியபோது, நான் வேலை செய்யும்போது எப்படி இருப்பேன் என்பதை சர்வசாதாரணமாக நடித்துக் காட்டினாள். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், அப்படி இருந்திருக்கிறேன். அவளுடைய செய்கை எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறேன். கடந்த ஓராண்டில் என்னுடைய அணுகுமுறைகளில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது" எனக் கூறினார்.

கொலின் சுலிஸ் லிங்க்ட் இன் புரொபைலின்படி, கொலின் சுலிஸ் எஸ்.ஏ.பி சக்ஸஸ் பேக்டர்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவர் என்ற முக்கிய பொறுப்பில் இருக்கிறார். குட்மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் பேசிய அவர், தனக்கு 3 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தார். இதனைப்போல் இன்னும் சில வீடியோக்கள் மீண்டும் செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறோம் எனக் கூறினார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: