டிக்-டாக் வீடியோ விபரீதம்... வாயில் மாட்டிக்கொண்ட மவுத் ஆர்கன்!

டிக்-டாக் வீடியோ விபரீதம்... வாயில் மாட்டிக்கொண்ட மவுத் ஆர்கன்!
டிக்-டாக் வீடியோ விபரீதம்
  • Share this:
டிக்-டாக்கில் சகோதரனை மகிழ்விக்க வித்யாசமான முறையில் மவுத் ஆர்கன் கொண்டு வீடியோ வெளியிட முயன்ற பெண்ணின் விபரீத வீடியோ வைரலாகி வருகின்றது.

டிக்-டாக் -பயன்படுத்தும் மோலி ஓ பிரென் (Mollie O’Brien ) எனும் இளம் பெண் ஒருவர் தனது தம்பியை மகிழ்விக்க எண்ணி மவுத் ஆர்கன் முழுவதையும் வாயில் வைத்து வாசித்து டிக்-டாக் வீடியோ ஒன்று எடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக மௌத் ஆர்கன் முழுமையும் அவரின் வாயில் மாட்டிக்கொண்டு ஊதினால் காற்று மட்டும் வந்துள்ளது.

பின்னர் பல் மருத்துவமனை சென்று மோலி தனது வாயில் உள்ள மௌத் ஆர்கனை அகற்றியுள்ளார். இது குறித்து மோலி தனது டிக்-டாக் பக்கத்தில் இது போன்று யாரும் பயன்படுத்தாதீர்கள். இதனால் தான் அவதியுற்றதனாகவும்,  மௌத் ஆர்கன் வாயில் மாட்டிக்கொண்ட தனது வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.


மேலும் தனக்கு வலி ஏற்பட்ட போதெல்லாம் சொற்களை கூற வரும் போதும், மூச்சு விடும் போதும் மௌத் ஆர்கன் இசைத்ததாகவும் அது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இது வரை இந்த வீடியோ டிக்-டாக்கில் 1.7 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 148.6K ஷேர் 20.3K கமெண்ட்ஸ் பெற்றுள்ளது.

 
@mollieobriengoing to cheo to get my harmonica removed... #foryou #fyp #foryoupage #dissapointment #failure #mymomdoesntloveme #idiot♬ I just did a bad thing bill wurtz - cameron.tr

First published: February 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading