பாகிஸ்தானில் மிகப்பழமையான வரலாற்று சிறப்புமிக்க சிலுவை கண்டுபிடிப்பு

வடக்கு பாகிஸ்தானில் சிந்து நதிக்கரை பகுதியில் பழமையான சிலுவையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பாகிஸ்தானில் மிகப்பழமையான வரலாற்று சிறப்புமிக்க சிலுவை கண்டுபிடிப்பு
  • Share this:
வடக்கு பாகிஸ்தானில் மலைப்பகுதிகளில் சிந்து நதிக்கரை அருகே ஸ்கார்டுவில் உள்ள பலுஸ்தான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது வரலாற்று சிறப்பு மிக்க பிரமாண்ட சிலுவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சிலுவை கி.பி. 900 -1200 காலக்கட்டத்தை சேர்ந்தது. பாகிஸ்தானில் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த சிரியாவை சேர்ந்த நெஸ்டோரியன் கிறிஸ்துவ மக்கள் இந்த சிலுவை செதுக்கிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 7 அடி நீளமுள்ள இந்த சிலுவை 4 டன் எடை கொண்டதாகும். இந்த சிலுவை முழுவதும் மார்பில் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

படிக்க: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

படிக்க: மருமகனை வரவேற்க 67 வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாமியார் - வைரல் வீடியோ


இது தொடர்பாக பாகிஸ்தான் ஆராய்ச்சியாளர் வாஜித் பாத்தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த தகவலில், “தோமா கிறிஸ்துவத்தை சேர்ந்தவர்கள் இந்த சிலுவையை வடிவமைத்திருக்கலாம். தோமா கிறிஸ்துவத்தை பரப்ப வந்த புனித தாமஸ் காலத்தில் இது உருவக்கப்பட்டிருக்கலாம்.

ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன் வடக்கு பாகிஸ்தானில் ஏராளமான கிறிஸ்துவர்கள் வசித்தற்கான ஆதராங்கள் உள்ளது. கில்ஜித் - பல்ஜிஸ்தான் பகுதியில் உள்ள மலைத்தொடர்களில் ஏராளமான சிலுவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சிலுவையால் பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்துவ மக்களுக்கு தன்னமப்பிக்கை மற்றும் சுயஅதிகாரம் அதிகரிக்கும்“ என்றும் தெரிவித்துள்ளார்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading