ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தேள், பாம்பை உயிரோடு நொடியில் வேட்டையாடி விழுங்கும் அதிபயங்கர மீன்... வைரல் வீடியோ

தேள், பாம்பை உயிரோடு நொடியில் வேட்டையாடி விழுங்கும் அதிபயங்கர மீன்... வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Fish Eats Scorpion Snake | பொதுவாக மீன்கள் உணவாக புழுவை சாப்பிடும் அல்லது அதன் அளவில் சிறியதாக இருக்கும் சிலவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விஞ்ஞானத்தின் வளர்ச்சி மற்றும் அதீத தொழில்நுட்பங்களால் இயற்கையில் உள்ள வினோதங்களை நாம் நாளுக்கு நாள் அறிந்து கொண்டு வருகிறோம். கடல், பூமி, ஆகாயம் என அனைத்திலும் இயற்கையின் அழகு கொட்டி கிடக்கிறது. அந்த அழகிற்கு நடுவில் சில பயங்கரமான ஆபத்துகளும் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றில் ஒன்று தான் வீடியோவில் நாம் பார்ப்பது.

  பொதுவாக மீன்கள் உணவாக புழுவை சாப்பிடும் அல்லது அதன் அளவில் சிறியதாக இருக்கும் சிலவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த வீடியோவில் தொட்டியில் இருக்கும் மீன் சாப்பிடும் இறையை கண்டும் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்படி அந்த மீன் என்னதான் சாப்பிட்டது என்பது இந்த வீடியோவில் நீங்களே பாருங்கள்.

  தொட்டியில் இருக்கும் மீன் முதலில் பூரான் போன்ற பெரிய பூச்சி, தேள், பாம்பை உயிருடன் வேட்டையாடி நொயில் விழுங்கியது. பார்ப்பதற்கு சிறிய அளவிலான இருக்கும் மீன் ஒன்று தேள், பாம்பை சாப்பிடுவதை பலர் ஷாக்காகி உள்ளனர். Amazing Nature என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 4,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

  Also Read : பதைப்பதைக்கும் வீடியோ: சைக்கிளில் வந்த சிறுவன் பைக் மோதி, பஸ் நொறுக்கி.. உயிர் தப்பிய அதிசயம்

  இந்த வீடியோவிற்கு பல கமெண்ட்களும் வந்துள்ளது. அதில் ஒரு யூசர் இதுப்போன்ற அதிபயங்கர மீனை இதுவரை பார்த்து இல்லை என்றுள்ளார். மற்றொரு யூசர் இந்த மீனிடம் நாம் சிக்கி கொண்டால் என்னவாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Viral Video