முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஐதராபாத்தில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட பேய் மீன்.. ஊர்மக்கள் அதிர்ச்சி

ஐதராபாத்தில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட பேய் மீன்.. ஊர்மக்கள் அதிர்ச்சி

டெவில் மீன்

டெவில் மீன்

Devil Fish : ஐதராபாத்தில் மழையின் காரணத்தினால் அடித்து வரப்பட்டு பெண்ணிடம் பிடிபட்ட பேய் மீனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hyderabad, India

ஐதராபாத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரில் பேய் மீன் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மீன் அடித்து வந்துள்ளது. அதனைப் பெண் ஒருவர் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராமந்தபூர் பகுதியில் ஒரு பெரிய மீன் மழை நீரில் அடித்து வந்துள்ளது. அதனை மீட்டுப் பாத்ததில் வைத்த போது தான் அது பேய் மீன் என்று தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வை ஒருவர் காணொளியாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் பேய் மீன் என்று அழைக்கப்படும் மீன் உயிருடன் கருப்பு நிறத்தில் உடலில் புள்ளிகளுடன் இருக்கிறது. மேலும் அதனின் வாயில் வரிசையாகக் கூர்மையான பற்கள் இருக்கிறது. நீளமான துடுப்புகளுடன் காட்சியளிக்கும் பேய் மீன் அந்த பகுதிக்கு மழை நீர் செல்லும் கால்வாய்கள் மூலம் அடித்து வரப்பட்டுயிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

டெவில் மீன்

இந்த மீனைப் பேய் மீன் என்று அழைப்பதற்குக் காரணம் இது மீனவர்களின் வலையில் சிக்கினால் அவர்களுக்குக் கெட்ட சகுணம் என்று அர்த்தமாம். தொடர்ந்து பல கெட்ட காரியங்கள் நடைபெறும் என்பது அந்த பகுதி மக்களிடையே இருக்கும் அச்சமாகும்.

Also Read : வீட்டுக்குள் புகுந்த கரடி - கேக் சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் குளித்து குதூகலம்.! வைரல் வீடியோ

தெலுங்கனா பகுதிகளில் பேய் மீன் வழக்கமாகக் கிடைப்பது இல்லை என்றாலும் இது அவ்வப்போது அந்த பகுதி ஆறுகளில் தென்படுகிறது. இந்த நிலையில் அவை தற்போது பெய்யும் மழையின் காரணத்தினால் வெளியில் வருகிறது. கோதாவரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மழையின் காரணத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

First published:

Tags: Fish, Hyderabad, Telangana