புனேவை சேர்ந்த EcoKaari என்ற நிறுவனம் நிலம் மற்றும் நீர் நிலைகளை மாசுபடுத்தும் கழிவுகளை மறுசுழற்சி செய்து அதனை ஹேண்ட்பேக்குகளாக மாற்றும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிக மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக அவர்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அந்த வகையில் அந்த பொருட்களிலிருந்து உருவாக்கப்படும் கழிவுகளும் மிக மிக அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்த கழிவுகள் குப்பைகளாக குவிக்கப்பட்டு எரிக்கப்படும் அல்லது கடலிலே கொட்டப்படும். ஆனால் சில வகையான கழிவுகளை மறுசுழற்சி செய்து வேறு பல புதிய காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்.
இதனால் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுவதுடன், கழிவுகளும் அதிக அளவில் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். புனேவில் புதியதாக துவங்கப்பட்டுள்ள இந்திய நிறுவனமான EcoKaari, இதுபோன்ற மறுசுழற்சி செய்யும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதைப்பற்றி அந்நிறுவனத்தின் நிறுவனர், நந்தன் பட் கூறும் போது ”எங்களது நிறுவனம் புனேவை மையமாக கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் ஆகும்.
ReadMore : நாய்க்குச் செரிமான பிரச்சனை! உரிமையாளர் தயாரித்த நாற்காலி.. வைரல் வீடியோ
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நிலத்திலும் கடலிலும் கொட்டப்படும் பல்வேறு வகையான கழிவுகளை ஒன்றாக திரட்டி அவற்றை மறுசுழற்சி செய்து அதிலிருந்து கைப்பைகளை பலவிதமான டிசைன்களில் தயாரித்து வருகிறோம். எங்களது நிறுவனத்தின் பெயரிலேயே எங்களது நோக்கத்தை வைத்துள்ளோம். Eco என்பது சுற்றுச்சூழலை குறிக்கும். அடுத்த வார்த்தையான Kaari என்பது கைவினை கலைஞர் அல்லது கலைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவரை குறிக்கும்.
இதனால் நலிந்து வரும் கைவினை பொருட்களின் முக்கியத்துவத்தை எங்கள் நிறுவனத்தின் மூலம் உலகிற்கு தெரிவிக்கவும், அதில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அதே சமயத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலான கழிவுகளை எப்படி உபயோகமாக மாற்றுவது என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதில் சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் அதிகமாக ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
எப்போதுமே கலைஞர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஒருவித தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது அதனைக் குறிக்கும் வகையில் தான் எங்கள் நிறுவனத்திற்கு EcoKaari என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நம் இந்தியாவின் கைவினைப் பொருட்கள் பாரம்பரியமானது நம்முடைய சுற்றுச் சூழலில் இருந்து தான் உத்வேகம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் நம்முடைய பூமி தாயும் எப்போதும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மதிக்கப்பட்டு வருகிறார். பாரம்பரியமாக செய்யப்படும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் முறையை பயன்படுத்தி தேவையான அளவில் மூலப் பொருட்கள் மற்றும் கழிவுகளை குறைத்தும் மறுசுழற்சி செய்தும் இந்த வேலையை நாங்கள் செய்து வருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இந்த சாதனையை செய்வதற்கு EcoKaari நிறுவனம், கழிவுகளை திரட்டும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் மூலம் தங்களுக்கு தேவைப்படும் கழிவுகளை பெற்றுள்ளனர். சில நேரங்களில் பொதுமக்களிடமிருந்தும் கழிவுகள் நன்கொடையாக இவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. அதில் ஏற்கனவே பயன்படுத்திய பைகள், பிஸ்கட்டு பாக்கெட்டுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் அடைக்கும் பாக்கெட்டுகள், நூடுல்ஸ் பாக்கெட்டுகள், சலவை செய்ய பயன்படுத்தும் சோப்பு பாக்கெட்டுகள் ஆகியவையும் இவர்களுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.
அவைகளை பெற்றவுடன் அவை கிருமிகள் தாக்காதவாறு சுத்தப்படுத்தப்பட்டு, அதன் பின்பு காய வைக்கப்படுகின்றன. பிறகு அவை துண்டு துண்டாக வெட்டப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றிலிருந்து பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் கருவிகளைக் கொண்டு கைப்பைகள் தயாரிப்பதற்கு தேவையான துணி மற்றும் நூல் ஆகிய மூலப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் மறு சுழற்சி செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கைப்பைகள் தயாரிக்கப்படுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hands, Trending Video, Viral