ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ!

ராகுல் காந்தியின் கேரளப் பயணங்களின் போது வழக்கமாக மொழிபெயர்க்கும் கே.சி.வேனுகோபால் சிரித்துக்கொண்டே அதே மேடையில் அமர்ந்திருந்தார்.

ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ!
மொழிபெயர்க்கும் மாணவி சஃபா
  • News18
  • Last Updated: December 5, 2019, 8:16 PM IST
  • Share this:
வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸின் ராகுல் காந்தி ஒரு பள்ளி விழாவில் உரையாற்ற, அதை 12-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் சிறப்பாக மொழிபெயர்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

வயநாடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அறிவியல் லேப் ஒன்றை திறந்துவைக்கச் சென்றிருந்தார் அத்தொகுதியின் எம்.பி ராகுல் காந்தி. பள்ளி விழாவில் உரையாற்றத் தொடங்கும் போது தனது உரையை பள்ளி மாணவர்களில் யாராவது ஒருவர் மொழிபெயர்க்க விரும்பினால் முன்வரலாம் என அழைத்தார்.

12-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவி சஃபா செபின் தன்னார்வத்துடன் முன்வந்தார். ராகுல் காந்தியின் கேரளப் பயணங்களின் போது வழக்கமாக மொழிபெயர்க்கும் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான கே.சி.வேணுகோபால் சிரித்துக்கொண்டே அதே மேடையில் அமர்ந்திருந்தார். மேடை ஏறிய மாணவி சஃபா ராகுலுக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் பதில் வணக்கம் தெரிவித்தார்.
தனது சக பள்ளி மாணவர்கள் உற்சாகப்படுத்த மிகவும் சிறப்பான முறையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்தார் அம்மாணவி. உரையின் இறுதியில் மாணவி சஃபா-வை சிறப்பான மொழிபெயர்ப்புக்காகப் பாராட்டினார் ராகுல் காந்தி. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் பார்க்க: கைலாசா தேத்துக்கான விசா நடைமுறை என்ன?- அஷ்வின் கேள்விக்கு ட்விட்டர்வாசிகளின் பதில்! 

 
First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்