Home /News /trend /

குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருக்க, 14 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே வாழும் சீனாக்காரர்!

குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருக்க, 14 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே வாழும் சீனாக்காரர்!

Chinese Man

Chinese Man

Trending | வெய் ஜியாங்குவோ தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த எலெக்ட்ரிக் குக்கரை பயன்படுத்தி, விமான நிலையத்தில் ஒரு நடமாடும் சமையலறையை செட் செய்துள்ளார். சமைக்க பிடிக்காத, சமைக்க முடியாத வேளைகளில் தனக்கு பிடித்த உணவை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே விமான நிலையத்தை சுற்றி வருகிறார் மற்றும் வேலையில் இருந்து நீக்கப்பட்ட இவர் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் அரசாங்க மானியத்தை வைத்தே பிழைப்பு நடத்தி வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
நாம் பயணிக்கும் ஒரு பேருந்து, ஒரு குறிப்பிட்ட பேருந்து நிலையத்தில் 2 நிமிடங்கள் தான் நின்று இருந்திருக்கும். ஆனால், அந்த 120 நொடிகளில் நாம் பல வகையான மனிதர்களை, சில சுவாரஸ்யமான 'கேரக்டர்களை' சந்தித்து இருப்போம்.

சிலர் சட்டென்று முகம் சுளிக்க வைத்து இருப்பார்கள், சிலர் கண்ணுக்கு எட்டும் தூரம் அவர்களையே பார்க்க வைத்து இருப்பார்கள்! உள்ளூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தால், வெறும் 2 நிமிடங்களில் இத்தனை வகையான மனிதர்களை காட்சிப்படுத்த முடிகிறது என்றால் பல நாடுகளை இணைக்கும், பலதேசத்து மக்களை நடமாட வைக்கும் ஒரு விமான நிலையத்தில் - மணிக்கணக்கில் காத்திருக்கும் - நாம் எத்தனை-எத்தனை 'கேரக்டர்களை' சந்திக்க முடியும்?!

ஒரு விமான நிலையத்தில் உங்கள் விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தில், உங்களை சுற்றி என்னென்ன நடக்கிறது என்று நீங்கள் வேடிக்கை பார்த்தது உண்டா? யார் யாரெல்லாம் என்னென்ன செய்கிறார்கள்? அவர்கள் எப்படிப்பட்ட்டவர்களாக இருப்பார்கள் என்று யூகித்தது உண்டா?

இப்படியாக ஒரு விமான நிலையத்தில், நீங்கள் பல வகையான மனிதர்களை பார்த்து இருக்கலாம், பேசி இருக்கலாம், பேசிப்பழகி தற்போது வரை நண்பர்களாக கூட இருக்கலாம். ஆனால் சீனாவை சேர்ந்த 'வெய் ஜியாங்குவோ'வை போல ஒரு மனிதரை / கேரக்டரை நீங்கள் பார்த்து இருக்கவே முடியாதுஏனெனில், எதோ ஒரு விமான நிலையத்தில் சாதாரணமாக நீங்கள் கடந்து செல்ல - வெய் ஜியாங்குவோ ஒரு பயணியோ அல்ல ஒரு விமான நிலைய அதிகாரியோ அல்ல, விமான நிலையத்திலேயே வாழ்பவர்; அதுவும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக! பல ஆண்டுக்காக இவர் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திலேயே தான் வாழ்கிறார் என்பதை விட அதிர்ச்சியான விடயம் என்னவென்றால், தன் குடும்பத்திலிருந்து விலகி இருப்பதற்காகவே இவர் இப்படி வாழ்கிறார் என்பது தான்!

Also Read : வீடு இன்றி, தெருவோரத்தில் வசித்த நபரை காதலித்து திருமணம்.. வைரலாகும் இளம் பெண்ணின் காதல் கதை

சீனாவின் பெய்ஜிங்கை சேர்ந்த வெய் ஜியாங்குவோ, கடந்த 2008-ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தகராறு செய்து விட்டு தன் வீட்டை விட்டு வெளியேறி, எங்கு போவது என்று தெரியாமல், மூன்று முனையங்களைக் கொண்ட பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையத்தில் தன் பகல் மற்றும் இரவுகளை கழிக்க முடிவு செய்தார்.

Also Read : வீட்டை விற்க மறுத்த மூதாட்டி - Shopping Mall Developer எடுத்த முடிவு!

எந்த வேலையும் செய்யாத வெய் ஜியாங்குவோ விமான நிலையத்தில் வசிப்பதை விரும்புவதாகவும், இங்கே இஷ்டத்துக்கு சாப்பிடலாம், குடிக்கலாம் என்று கூறவது தான் 'அல்டிமேட்' ஆன விஷயம். அதாவது இதுவொரு சோக கதை என்று நம்பி உள்ளே வந்தவர்களுக்கு 'பல்பு' நிச்சயம்!சீனாவின் பிரபல செய்தி நிறுவனமான சீனா டெய்லிக்கு இவர் அளித்த பேட்டி ஒன்றில், "என் வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை எனவே என்னால் அங்கு திரும்பி செல்ல முடியாது. நான் வீட்டில் தங்க வேண்டும் என்றால் நான் புகை பிடிப்பதையும் குடிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று எனது குடும்பத்தினர் வலியுறுத்துகிறார்கள். என்னால் அதை செய்ய முடியாவிட்டால், என்னுடைய மாதாந்திர அரசு உதவித் தொகையான 1,000 யுவான்-ஐ (இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.12,000) அவர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி செய்தால் நான் எப்படி சிகரெட் மற்றும் 'சரக்கை' வாங்க முடியும்?" என்று கொந்தளித்து உள்ளார் வெய் ஜியாங்குவோ!

Also Read : இங்கிலாந்து பெண்ணின் கூந்தலில் 84 நாட்களாக கூடு கட்டி வாழ்ந்த பறவை...

வெய் ஜியாங்குவோ தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த எலெக்ட்ரிக் குக்கரை பயன்படுத்தி, விமான நிலையத்தில் ஒரு நடமாடும் சமையலறையை செட் செய்துள்ளார். சமைக்க பிடிக்காத, சமைக்க முடியாத வேளைகளில் தனக்கு பிடித்த உணவை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே விமான நிலையத்தை சுற்றி வருகிறார் மற்றும் வேலையில் இருந்து நீக்கப்பட்ட இவர் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் அரசாங்க மானியத்தை வைத்தே பிழைப்பு நடத்தி வருகிறார்.இப்படி ஏர்போர்ட்டிலேயே வாழும் நபர்களின் பட்டியலில் வெய் ஜியாங்குவோ மட்டும் இல்லை. ஈரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி என்பவரும் உள்ளார். ஆனால் இவரின் கதை உண்மையிலேயே ஒரு சோக கதையாகும். ஒரு அகதியான மெஹ்ரான், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரையிலாக 2006 ஆம் ஆண்டு வரை பாரீஸ் சார்லஸ் டி கோலின் விமான முனையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார்.

Also Read : ஒரே பெண்ணுக்கு 21 குழந்தைகள்.. ஆனால் எல்லாமே 2 வயதுக்கு கீழே தான்

ஏனெனில் பிரிட்டிஷ் அதிகாரிகள் இவரை பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்காததால் அவர் விமான நிலையத்திலேயே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்னும் கொடுமையான விடயம் பிரான்ஸும் இவரை தன் நாட்டிற்குள் நுழைய அனுமதி தரவில்லை.
Published by:Selvi M
First published:

Tags: China, Trending

அடுத்த செய்தி