3 வயது குழந்தையுடன் டிராம்போலைனில் உற்சாகமாக துள்ளி குதித்து விளையாடும் நாய் : வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோ

யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள வயோமிங்கைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற குழந்தை அவளது நாயுடன் டிராம்போலைனில் மேலும் கீழுமாக குதித்து பவுன்சிங் செய்து விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

  • Share this:
ரோட்வீலர்ஸ் இனத்தை சேர்ந்த நாய்கள் விரைவில் கோபமடையும் மூர்க்கமான நாய்கள் என்று அறியப்பட்டாலும், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வைரல் வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது. மூன்று வயது சிறுமி தனது இரண்டு வயது ரோட்வீலர் நாயுடன் டிராம்போலைனில் குதித்து விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள வயோமிங்கைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற குழந்தையும் அவளது இரண்டு வயது கோனா என்ற ரோட்வீலரும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் நீல டிராம்போலைனில் மேலும் கீழுமாக குதித்து பவுன்சிங் செய்து வரும் காட்சிகள் நாய் விரும்பிகளையும், மற்றவர்களையும் மெய்மறக்கச் செய்துள்ளது. மேலும் அனைவரின் முகத்தில் சிரிப்பையும், மனதில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோனா தி ரோட்டியை அவருடன் விளையாட ஊக்குவிக்க வகையில் குழந்தை அலெக்ஸ் “பவுன்ஸ்” என்று கூச்சலிடுவதை அந்த அபிமான வீடியோவில் காணலாம். மகிழ்ச்சியான குழந்தைக்கு பதிலளிக்கும் விதமாக கோனாவும் தனது பங்கிற்கு உற்சாகத்துடன் குதித்து விளையாடி வந்தது. மேலும் கோனா சில ஸ்டண்டுகளை செய்வதையும் வீடியோவில் காணலாம். இந்த வீடியோவை அலெக்ஸின் பெற்றோர் ஜாக்சன் நகரத்தில் உள்ள தங்கள் வீட்டில் படமாக்கியுள்ளனர்.

குறிப்பாக கோனா நாய் "வாவ்" என்று கத்துவதன் மூலம் தனது குறுநடை போடும் சிறந்த தோழியான அலெக்ஸின் சைகைகளைப் பின்பற்ற முயற்சிப்பதை வீடியோ கிளிப்பில் காணலாம். கோனா அலெக்ஸின் இனிமையான வார்த்தைகளுக்கு நட்புடன் குரைப்பதன் மூலம் பதிலளித்து வந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான இணையவாசிகளை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து மெயில் ஆன்லைனுடன் பேசிய பெற்றோர், "அலெக்ஸ் எங்கள் இரண்டு வயது ரோட்வீலர் கோனாவுடன் டிராம்போலைன் மீது குதிக்க விரும்பினார். கோனா அலெக்ஸுடன் மிகவும் இனிமையானவர். மேலும் அவளுடைய சிறந்த நண்பர் கோனா என்று தெரிவித்தார். அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்வார்கள் " என்று குறிப்பிட்டுள்ளனர். அலெக்ஸின் தாயார் தனது மகளின் அழகான நட்பையும் அவரது துள்ளல் நண்பரான கோனாவையும் படம்பிடிக்கும் போது சிரித்துக்கொண்டே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் நாய்களுடன் விளையாடும் வீடியோக்கள் ஏராளமானவை இணையத்தில் அதிகப்படியான வரவேற்பைப் பெற்றுள்ளன.

 

https://youtu.be/PMH3U5mYjSU

குறிப்பாக சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்த பின்னர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பிரத்யேக சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி, அதில் உரிமையாளர்கள் தங்கள் செல்ல பிராணிகளின் அன்றாட வாழ்க்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வீடியோக்களும், பதிவுகளும் மில்லியன் கணக்கான பார்வைகளை கவர்ந்து வருகின்றன. ஏனென்றால் மக்கள் செல்லப்பிராணிகளின் காதலுக்காக ஏங்கி வருகின்றனர். மேலும் சில நேரங்களில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்க முட்டாள்தனமான மற்றும் அபிமான செயல்களில் செல்லப்பிராணிகள் ஈடுபடும் வீடியோவையும் காணலாம்.
Published by:Tamilmalar Natarajan
First published: