கஞ்சா, கோக்கைன் கடத்தியதாக புகார்... பனாமாவில் பூனை கைது!

கஞ்சா, கோக்கைன் கடத்தியதாக புகார்... பனாமாவில் பூனை கைது!

கஞ்சா, கொகைன் கடத்திய பூனை கைது

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பூனை கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படத்தை பனாமா அதிகாரிகள் சமூகவலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பனாமாவில் சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் கோக்கைன் கடத்திய புகாரில் பூனை ஒன்றை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பனாமாவில் சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் கோக்கைன் கொண்டு வருவதற்காக பூனை ஒன்றை கடத்தல்காரர்கள் மற்றும் கைதிகள் பயன்படுத்தியுள்ளனர். அதனை அண்மையில் கண்டுபிடித்த சிறைத்துறை அதிகாரிகள், முறைகேடாக சிறைத்துறைக்குள் போதைப்பொருள் கடத்துவதற்கு உதவியாக இருந்த பூனையை கைது செய்துள்ளனர். பனாமா நகரத்தின் கோலான் (Colon) மாகாணத்தில் நியூஷா எஸ்பெரன்சா (Neuza Esperanza) என்ற சிறைச்சாலை உள்ளது.

சுமார் 1700க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள அந்த சிறைச்சாலையில் கஞ்சா மற்றும் கோக்கைன் பயன்பாடு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் இருக்கும் நிலையிலும் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் எவ்வாறு வருகிறது என்று ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவு நேரங்களில் சிறைச்சாலையின் சுவற்றில் பூனை ஒன்று செல்வதை கண்டுபிடித்தனர். அதனை பிடித்து சோதனை செய்ததில், கழுத்தில் பை துணி ஒன்று கட்டப்பட்டிருந்ததுள்ளது. அதனை பிரித்து சோதனை செய்த அதிகாரிகள், துணிக்குள் தைக்கப்பட்ட நிலையில் கஞ்சா, கோக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்ததை கைப்பற்றினர்.

இதனையடுத்து சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்ட அந்த பூனையை கைது செய்த அதிகாரிகள், விலங்குகள் நலத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், வழக்கத்துக்கு மாறாக சிறைச்சாலைக்குள் பூனை ஒன்று வந்து செல்வதை கவனித்ததாக கூறினார். அந்த பூனையின் கழுத்தில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்ததை கவனித்ததாகவும், பின்னர் சந்தேகப்பட்டு அதனை பிடித்ததாகவும் கூறினார்.

பூனையை பிடித்து கழுத்துப் பகுதியை சோதனை செய்தபோது கைதிகளுக்கு வெளியே இருந்து போதைப்பொருட்கள் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்ததாக அந்த அதிகாரி கூறினார். வெளியில் கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை நிரப்பியவுடன், சிறைக்குள் இருக்கும் நபர்களுக்கு அந்தப் பூனை கொண்டு சேர்த்துவந்ததையும் சுட்டிக்காட்டிய அவர், தற்போது சட்டவிரோத செயல் தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Also read... ராணியாக பொறுப்பேற்க மூளையை சுருக்கும் ஜம்பிங் எறும்புகள்...!

விலங்குகளை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்படுவது இது முதன்முறையல்ல எனக் கூறிய அவர், இதற்கு முன்னர் புறா மற்றும் டிரோன்கள் மூலம் போதைப்பொருட்கள் சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அதனையும் கண்டுபிடித்து தடுத்திருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரி கூறினார். 23 அறைகளில் 1800 -க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், இதுபோன்று முறைகேடாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கினார். போதைப்பொருட்கள் கடத்துவதற்காக புறாக்கள் பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதை பார்த்திருப்பதாகவும், பூனை மூலம் கடத்தப்படுவது தற்போது புதிய டெக்னிக்காக இருப்பதாகவும் நியூஷா எஸ்பெரன்சா சிறைத்துறை அதிகாரி கூறினார்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பூனை கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படத்தை பனாமா அதிகாரிகள் சமூகவலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: