Home /News /trend /

திருமண வரவேற்பில் இது புதுசு கண்ணா புதுசு - டிராக்டரில் வந்திறங்கிய மணமகள்!

திருமண வரவேற்பில் இது புதுசு கண்ணா புதுசு - டிராக்டரில் வந்திறங்கிய மணமகள்!

டிராக்டரில் வந்திறங்கிய மணமகள்!

டிராக்டரில் வந்திறங்கிய மணமகள்!

Trending | மத்தியப் பிரதேச மாநிலம், பீட்டல் நகர் அருகே மணப்பெண் அலங்காரத்தில் விழாவுக்கு டிராக்டரை தானே ஓட்டி விழா அரங்கிற்கு வந்து சேர்ந்தார்.

திரையில் மட்டுமே ஹீரோ, ஹீரோயின்களை பார்த்து வாழும் சாமானியர்களாகிய நாமும் கூட ஒருநாள் ஹீரோ, ஹீரோயினாக வலம் வருவதற்கான வாய்ப்பு கிடைக்கத் தான் செய்கிறது. நமது திருமண விழா தான் அந்த சிறப்புக்கு உரிய நாள் ஆகும். அன்றைய தினம், விழா அரங்கில் எத்தனை பேர் வந்திருந்தாலும் அங்கு ஹீரோ, ஹீரோயினாக ஜொலிக்கப் போவது நாம் மட்டுமே.

அதனால், தான் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் மணமகன் அழைப்பு ஊர்வலம் மற்றும் மணமகள் அழைப்பு ஊர்வலம் போன்றவை அவரவர் வசதிக்கு ஏற்ப கோலாகலமாக நடத்தப்படுகிறது. எந்தவொரு மணமகனோ அல்லது மணமகளோ, பத்தோடு, பதினொன்றாக திருமண அரங்கிற்கு வந்து விடுவதில்லை.

மணமகன், மணமகள் வருவதற்கான நல்ல நேரம் பார்த்து, அந்த சமயத்தில் இசை, வாத்தியங்கள் முழங்க பட்டாசு வெடித்து அரங்கத்தில் நுழைகின்றனர். இன்னும் சிலர் அலங்கரிக்கப்பட்ட கார் அல்லது அலங்கார ஊர்திகளில் திருமணத்திற்கு வந்து சேருவார்கள். தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மணமகனை குதிரையில் அமர வைத்து அழைத்து வருவதும் உண்டு.

Read More : கல்யாணத்த நிறுத்துங்க... கடைசி நேரத்தில் மணப்பெண் சொன்ன அதிர்ச்சி காரணம்


அதே சமயம், தங்கள் திருமண நாளானது மிகவும் சிறப்புக்குரியதாக, மற்றவர் ஆச்சரியப்படும் விதமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு சில மணமகன் அல்லது மணமகள் மிகவும் வித்தியாசமான தோரணையில் விழா அரங்கத்திற்கு வந்து சேருவது உண்டு.

டிராக்டர் ஓட்டி வந்த மணமகள்

மத்தியப் பிரதேச மாநிலம், பீட்டல் நகர் அருகே இதுபோன்ற வித்தியாசமான நிகழ்வு அரங்கேறியிருக்கிறது. இங்கு பாரதி தார்கே என்ற பெண் பொறியாளருக்கு திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, மணப்பெண் அலங்காரத்தில் விழாவுக்கு புறப்பட்ட அவர், டிராக்டரை தானே ஓட்டி விழா அரங்கிற்கு வந்து சேர்ந்தார். மணப்பெண்ணுடன் அவரது சகோதரர்களும் உடன் வந்தனர்.



டிவிட்டரில் வைரல்

மணப்பெண் டிராக்டரில் வந்திறங்கிய வீடியோ டிவிட்டரில் வெளியானது. வித்தியாசமான இந்த முயற்சியை பலரும் ஆர்வமாக பார்க்க தொடங்கிய நிலையில், அந்த வீடியோ வைரல் ஆனது. இதுகுறித்து பாரதி தார்கே கூறுகையில், ”எனது திருமண விழாவில் புதுமையான ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். வழக்கமான மரபுகளைத் தாண்டி சற்று வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிராக்டரில் வந்து இறங்கினேன்’’ என்று கூறினார்.

மஹிந்திரா நிறுவனர் அதிபர் பாராட்டு

டிவிட்டரில் வைரலான இந்த வீடியோ, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்திற்கு போனது. மணப்பெண் ஓட்டி வந்த ‘ஸ்வராஜ்’ டிராக்டர் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Madhya pradesh, Trending, Viral

அடுத்த செய்தி