முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பள்ளி சிறுவனை ஓட ஓட தூரத்திய தெரு நாய்கள்..

பள்ளி சிறுவனை ஓட ஓட தூரத்திய தெரு நாய்கள்..

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

3 நாய்கள் அவனை துரத்த ஆரம்பித்ததால் தனது பள்ளி பையை தூக்கி போட்டு தன்னை காப்பாற்ற ஓடய சிறுவன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பல குழந்தைகளுக்கு நாயை பார்த்தாலேயே பயம் இருக்கிறது. இன்னும் சிலர், எந்த வயதானாலும் செல்ல பிராணிகளை கண்டால் நெருங்க அஞ்சுவர். ஒரு சிறுவன் நாயை பார்த்து பயந்து ஓடும் வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் கோலையாடு பகுதியை சேர்ந்த சாசி என்ற சிறுவன் தனது பள்ளியை முடித்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தான்.

அப்போது, சிறுவன் வீட்டு வளாகத்திற்குள் நுழையும் போது, திடீரென அங்கு இருந்த 3 தெரு நாய்கள் சிறுவனை துரத்த ஆரம்பித்தது. இதில், பதரிய சிறுவன், செய்வதறியாது, தனது பள்ளி பையை தூக்கி வீசிவிட்டு தன்னை காப்பாற்ற ஓடோட ஆரம்பித்தான். வீட்டை சுற்றி சிறுவன் ஓடினாலும், அந்த நாய்கள் அவனை விடாமல் துரத்திய வந்தது.

பல முறை வீட்டை சுற்றி ஓடி வந்த சிறுவன், வீட்டு வளாகத்தை விட்டு வெளியே வந்த பின்னர் தான் நாய்கள் அவனை துரத்துவதை நிறுத்தியது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வளைதலங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

First published:

Tags: Dog, Kerala, School boy