ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பதைப்பதைக்கும் வீடியோ: சைக்கிளில் வந்த சிறுவன் பைக் மோதி, பஸ் நொறுக்கி.. உயிர் தப்பிய அதிசயம்

பதைப்பதைக்கும் வீடியோ: சைக்கிளில் வந்த சிறுவன் பைக் மோதி, பஸ் நொறுக்கி.. உயிர் தப்பிய அதிசயம்

விபத்து காட்சி

விபத்து காட்சி

Viral Video | கேரள மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் நூழிலையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கண்இமைக்கும் நேரத்தில் சிறுவன் ஒருவன் உயிர்பிழைத்த வீடியோ காண்போர் மனதை பதறவைக்கிறது. பொதுவாக நூலிழையில் உயிர் தப்பிய சம்பவங்கள் இணையத்தில் உலாவி வருகின்றன. சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படியெல்லாம் நடக்குமா எவ்ளோ லக் அவருக்கு என வியக்கும் வண்ணம் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதை நாம் தினசரி வாழ்வில் கடந்து கொண்டிருக்கிறோம்.

  இருந்தாலும் ஒருசில நிகழ்வுகள் நம் இதயத்தை ஒரு நிமிடம் நிறுத்தும் அளவு அரங்கேறுகிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் கேரளா மாநிலத்தில் உள்ளது கண்ணூர் மாவட்டத்தில் நடந்தது. இந்த மாவட்டத்தில் தளிபரம்பா அருகே உள்ளது சொருக்காலா கிராமம். இங்கு கடந்த 2 தினங்களுக்கு முன்  நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் சாலையை கடக்க முயலும் போது பைக்கில் மோதினான்.

  அந்த சிறுவன் அடுத்தடுத்து தொடர்ந்து வரும் பைக் மற்றும் பேருந்தின் நடுவே வேகமாக நுழைகிறான். பைக்கில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதால் அதே சமயத்தில் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்குவதில் இருந்து அவன் நூல் இழையில் தப்பித்தான். பின் எழுந்து நின்று செய்வதறியாது கைகால்களை துடைத்தபடி நிற்கிறான்.

  பேருந்தில் சிக்கிய அவனது மிதிவண்டி சுக்கு நூறானது. அதே நேரத்தில் சிறுவன் சிறு காயங்களோடு உயிர் பிழைத்தான். தற்போது இது குறித்து வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Kerala, Viral Video