• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மிகவும் சுத்தமான நதி - வைரலாகும் உம்ங்கோட் நதியின் புகைப்படம்!

மிகவும் சுத்தமான நதி - வைரலாகும் உம்ங்கோட் நதியின் புகைப்படம்!

மிகவும் சுத்தமான நதி

மிகவும் சுத்தமான நதி

பலர் இந்த நதியும் அசுத்தமடைந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

  • Share this:
தமிழகத்தில் நொய்யல் நதி, டெல்லி யமுனை போன்ற பல்வேறு நீர்நிலைகளில் தொடர்ந்து மாசுக்களால் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதற்கு ராசயன கழிவுகள் ஆற்றில் திறந்து விடுவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் மேகாலயாவில் உள்ள ஆற்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நதி மேகாலயாவின் ஷில்லாங் நகருக்கு அருகே அமைந்துள்ளது. இவ்வளவு அழகான நதியா? என பார்ப்பவரை பிரமிக்க வைக்கும் வகையில் அந்த நதி மிகவும் அழகாகவும், தெளிவாகவும் உள்ளது.

அந்த நதியின் புகைப்படத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், உலகின் மிகவும் சுத்தமான நதிகளில் ஒன்று இந்தியாவில், மேகாலயாவின் ஷில்லாங்கில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள உம்ங்கோட் நதி என்று குறிப்பிட்டிருந்தது. இதில் தண்ணீர் தெளிவாகவும், சுத்தமாகவும் இருப்பதால் படகு காற்றில் பறப்பது போல தெரிகிறது. அனைத்து நதிகளும் இது போன்று தூய்மையாக இருக்க வேண்டும். இந்த நதியை தூய்மையாக வைத்திருக்கும் மேகாலயா மக்களுக்கு ஹாட்ஸ் ஆப் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தில் இருக்கும் நதி மிகவும் சுத்தமாக உள்ளது. மேலும் நீருக்குஅடியில் இருக்கும் கூழாங்கற்கள் கூட மிகவும் தெளிவாக தெரிகிறது. அதில் ஐந்து பேர் அமர்ந்து கொண்டிருக்க படகு ஒன்று அந்த ஆற்றில் பயணித்துச் செல்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும் பலரும் கமெண்ட்ஸ்கள் செய்த வண்ணம் உள்ளனர். இவ்வளவு பசுமையான, தெளிவான நதி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதாக நெட்டிசன் ஒரு கமெண்ட் செய்துள்ளார்.



மேலும் பலர் இந்த நதியும் அசுத்தமடைந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். பூர்வ் தர்மபரிவேக்ஷ் என்பவர் இந்த புகைப்படத்தை வைரலாக்க வேண்டாம், ஏனென்றால் பலர் அங்கு சென்று இந்த நதியை யமுனை போல மாசாக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பலரும் யமுனை நதியில் நுரை பொங்கும் புகைப்படத்தை ஷேர் செய்து கண்டனம் தெரிவித்துள்ளனர். மாசு கட்டுப்பட்டு அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

Also read... 2021ல் இந்தியாவில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் "Password" இது தான்!

இதனிடையே நவம்பர் 9ம் தேதி, யமுனை நதியில் நுரையை தடுக்கும் முயற்சியில் டெல்லி அரசாங்கம் ஈடுபட்டது, மேலும் பொதுமக்கள் யாரும் அங்கு வரமுடியாத வகையில் தற்காலிக தடுப்புகளை அமைத்தது. டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி), நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவை இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் டெல்லியில் காற்றின் தரக் குறியீட்டை மேம்படுத்த நவம்பர் 21ம் தேதிக்குப் பிறகு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: