Home /News /trend /

பழிக்குப் பழி - துப்பாக்கியால் சுட்டவரை உடனே தாக்கிய பறவை…. அசத்தல் வீடியோ! 

பழிக்குப் பழி - துப்பாக்கியால் சுட்டவரை உடனே தாக்கிய பறவை…. அசத்தல் வீடியோ! 

வானத்தில் பறந்து கொண்டிருந்த பறவை ஒன்றை வயல் வெளியில் நின்றவாறு ஒருவர் துப்பாகியால் சுட்டுள்ளார். உடனடியாக அவரை நோக்கி வேகமாக வந்த பறவை, துப்பாக்கியால் சுட்ட நபரின் வலது கண்ணை கொத்திவிட்டு சென்றது. இதனால் அவருக்கு வலது கண்ணில் வலி ஏற்பட்டு துடிக்கிறார். 

மேலும் படிக்கவும் ...
அரசன் அன்றே கொல்வான் ... தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியை காலம் காலமாக நாம் கேட்டு வந்திருக்கிறோம். அரச முறை ஒழிந்திருந்தாலும், பழமொழி இன்னும் வழக்கில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது அந்த பழமொழியையும் மாற்றும் விதமாக பறவை  ஒன்றின் செயல் அமைந்துள்ளது. வானத்தில் பறந்து கொண்டிருந்த பறவை ஒன்றை வயல் வெளியில் நின்றவாறு ஒருவர் துப்பாகியால் சுட்டுள்ளார். உடனடியாக அவரை நோக்கி வேகமாக வந்த பறவை, துப்பாக்கியால் சுட்ட நபரின் வலது கண்ணை கொத்திவிட்டு சென்றது. இதனால் அவருக்கு வலது கண்ணில் வலி ஏற்பட்டு துடிக்கிறார். 

6 நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்திய வனத்துறையில் பணியாற்றும் சுஷாந்தா நந்தா (Susanta Nanda IFS) என்ற அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இதற்கு பெயர் தான் 'கர்மா' என அவர் குறிப்பிட்டுள்ளார். நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்ற பறவையின் காணொளி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது. பலரும் பறவையின் செயலைக் கண்டு மகிழ்ச்சியுடன் பூரிப்படைந்துள்ளனர். மேலும், சிலர் பறவைகள் கூட பழிவாங்கும் என்பதை இன்று அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இயற்கையை காப்பதிலும், உணச்சங்கிலி நிலையாக இருப்பதற்கும் பறவைகளின் பங்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி, காடுகள் அழிப்பு, தொழிற்சாலைகளின் பெருக்கும் ஆகியவற்றால் வாழ்விடங்கள் இல்லாமல், உணவு கிடைக்காமல் பறவை இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களை மனிதர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பறவைகளை பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். பறவைகளை பாதுகாப்பது என்பது, காடுகளை பாதுகாப்பதில் இருந்து தொடங்குகிறது.

அண்மையில் வெளியான ஒரு ஆய்வில், 116 பறவை இனங்கள் அருகி வருவதாகவும், 21 பறவை இனங்கள் மட்டுமே பெருகிவருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 101 பறவை இனங்கள் மிகவும் கவனம் செலுத்தி பாதுகாக்கப்பட வேண்டியவை என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரியை வாழ்விடமாகக் கொண்ட 19 பறவை இனங்கள் விரைவாக அருகி வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

ரிச்சர்ட் நெட்டைக்காலி , இந்தியப் பிணந்தின்னிக் கழுகு, லீஃப் வார்பிலர், கல்பொறுக்கி உப்புக்கொத்தி (Pacific Golden Plover), கர்லூ உள்ளான் (Curlew Sandpiper) ஆகிய பறவைகள் அதிகளவில் அருகி வருவதாகவும், சோளப்பட்சி (Rosy Starling), புறா (Feral Pigeon), அன்றில் (Glossy Ibis), கதிர்க்குருவி(Plain Prinia),சாம்பல் கதிர்க்குருவி (Ashy Prinia), இந்திய மயில் (Indian Peafowl) ஆகியவை பெருகி வருவதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பறவை இனங்கள் குறைந்து வருவது என்பது நல்ல அறிகுறி அல்ல என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வரும் நிலையில், குருவி ஒன்று வேட்டையாடுபவரை பழிவாங்கியது இயற்கை ஆர்வலர்கள் இடையே வைரல் ஆகியுள்ளது.
Published by:Ram Sankar
First published:

Tags: Birds, Forest, Gun shoot

அடுத்த செய்தி