• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Video | இரண்டு நாய்கள், ஏழு பேருடன் சென்ற இரு சக்கர வாகனம்! வைரலாகும் வீடியோ

Video | இரண்டு நாய்கள், ஏழு பேருடன் சென்ற இரு சக்கர வாகனம்! வைரலாகும் வீடியோ

இரு சக்கர வாகனப் பயணம்

இரு சக்கர வாகனப் பயணம்

ஒரு சில நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் நான்கு பேர், ஐந்து பேர் பயணம் செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்து ஆச்சர்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஒரே பைக்கில் ஏழு பேரும் இரண்டு நாய்களும், வீட்டுப் பொருள்களும் சேர்ந்து பயணித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றனர்.

    இந்தியா முழுவதும் இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது சட்டம். மூன்று பேர் பயணித்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அதற்கான அபாராதத்தை உடனடியாக செலுத்தவேண்டும்.

    இருப்பினும், கிராமப் புறப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிக்கும் நிகழ்வுகளை நாம் எளிமையாகப் பார்க்க முடியும். ஒரு சில நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் நான்கு பேர், ஐந்து பேர் பயணம் செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்து ஆச்சர்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. நாம் இதுவரையில் கண்டிருந்த அனைத்து நிகழ்வுகளையும் மறக்கடித்துவிட்டு ஆச்சர்யப்படுத்தும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.


    அதில் இரு சக்கர வாகனத்தில் ஏழு பேர் பயணிக்கின்றனர். அவர்களுடன் இணைந்து இரண்டு நாய்களும் வீட்டுப் பொருள்களும் பலவும் பயணிக்கின்றன. அந்த வீடியோவை இணையத்தில் பகிரும் நெட்டீசன்கள், இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என்பதுபோல பதிவிட்டுவருகின்றனர். அந்த வீடியோ எந்தப் பகுதியில் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: