“பாலத்த காணோம்...” இது ரஷியாவில் நடந்த விசித்திர திருட்டு

இரவோடு இரவாக ஒரு பாலத்தையே உடைத்து எடுத்துச்சென்ற பலே திருடர்கள் யார் என சமூக வலைதளங்களில் விவாதம் ஏற்பட்டுள்ளது.

news18
Updated: June 8, 2019, 10:54 AM IST
“பாலத்த காணோம்...” இது ரஷியாவில் நடந்த விசித்திர திருட்டு
திருடுபோன பாலம்
news18
Updated: June 8, 2019, 10:54 AM IST
ரஷ்யாவின் முர்மன்ஸ்க் என்ற இடத்தில் நடந்த விசித்திர திருட்டு சம்பவத்தில், 75 அடி நீள இரும்புப் பாலத்தையே சில நாட்களில் கொள்ளை கும்பல் உடைத்து எடுத்துச் சென்றுள்ளது.

நகைச்சுவை காட்சி ஒன்றில் வடிவேலு தனது கிணற்றை காணவில்லை என்று கூறி சிரிக்கவைத்து கேள்விப்பட்டிருப்போம், ரஷ்யாவில் திருட்டு கும்பல் ஒன்று 56 டன் ஆற்றுப்பாலத்தை சில நாட்களில் உடைத்து தடம் தெரியாமல் கடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முர்மன்ஸ்க் பகுதியில் உம்பா நதியின் மேல் அமைந்துள்ள இந்த ரயில்வே பாலம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இங்கு மக்கள் நடமாட்டம் பெரிய அளவில் இருக்காது என கூறப்படுகிறது.


கடந்த மே மாதம் இந்த பாலம் மாயமாக மறைந்ததாக அந்நாட்டின் சமூக வலைத்தளம் ஒன்றில் தகவல் பரவியது.

அந்நாட்டில் பிரபலமான வி.கே என்ற சமூக வலைதளத்தில் இது பற்றிய காரசார விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திருட்டு இரவு நேரத்தில் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பாலம் கீழே விழுந்து உடைந்திருந்தால் அதன் இடிபாடுகள் இருக்க வேண்டும், ஆனால், அதற்கான தடமே இல்லை என்பதுதான் விசித்திரம் ஆகும்.

Loading...

இரவோடு இரவாக ஒரு பாலத்தையே உடைத்து எடுத்துச்சென்ற பலே திருடர்கள் யார் என சமூக வலைதளங்களில் விவாதம் ஏற்பட்டுள்ளது.

First published: June 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...