Home /News /trend /

என்னையும் சாதாரண மனிதன் போல் மதியுங்கள் - வித்தியாச முயற்சியால் வேதனைப்படும் இளைஞர்

என்னையும் சாதாரண மனிதன் போல் மதியுங்கள் - வித்தியாச முயற்சியால் வேதனைப்படும் இளைஞர்

 பிளாக் ஏலியன்ஸ் போல மாறிய இளைஞர் தன்னையும் மனிதனாக நடத்தச்சொல்லி உருக்கம்

பிளாக் ஏலியன்ஸ் போல மாறிய இளைஞர் தன்னையும் மனிதனாக நடத்தச்சொல்லி உருக்கம்

இப்படி தனக்குப் பிடித்தவாறு உடல் அமைப்பை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்திவந்த அந்தோனி படும் துயரங்களும், பிரச்சனைகளும் ஏராளம் இருக்கிறதாம்.

    நானும் சாதாரண மனிதன் தான்.. என்னையும் கொஞ்சம் மதியுங்கள்.. எனக்கும் வேலைவாய்ப்பு வழங்குங்கள் என உருக்கத்துடன் கூறுகிறார் கருப்பு வேற்று கிரக வாசியாக மாறிய பிரான்ஸை சேர்ந்த அந்தோனி லோஃப்ரெடோ என்ற 34 வயதான இளைஞர்.

    நம்மில் பலர் ஏதாவது புதுமையான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதிலும் மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக உடல் முழுவதும் பச்சைகுத்துவது, ஹேர் ஸ்டைலை மாற்றுவது, வித்தியாசமான உடை அணிவது என்ற தங்களுக்குப் பிடித்தாற்போல் பலவற்றையும் மாற்றிக்கொள்வார்கள்.

    இது போன்ற மனநிலையிலிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 34 வயதான அந்தோனி லோஃப்ரெடோ என்ற இளைஞர், சினிமா கதாபாத்திரத்தில் வரக்கூடிய வேற்று கிரக வாசியாகத் தன்னை கற்பனை செய்துகொண்டதோடு உடலில் பல மாற்றங்களையும் மேற்கொண்டுள்ளார். இதற்காக ஆரோக்கியமாக இருந்த உடலைத் தீவிரமான அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தி மாற்றியுள்ளார்.

    Also Read:அமானுஷ்ய செயல்கள் நிறைந்த மனநல மருத்துவமனை - நேரில் காண வாய்ப்பு

    குறிப்பாக அந்தோனி லோஃப்ரெடோ தன்னுடைய இடது கை வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை மூலம் செயற்கை வளையங்களை உருவாக்கியுள்ளார். இதோடு அவர் நின்றுவிடவில்லை நாக்கை இரு துண்டுகளாகவும், காது, மூக்கு, உதடு ஆகியவற்றையும் வெட்டியுள்ளார்.

    மேலும் தலை முதல் கண் இமைகள் உள்படப் பாதம் வரை உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். பார்ப்பதற்கே திரைப்படங்களில் வரும் கற்பனைக் கதாபாத்திரமான Black aliens அதாவது கருப்பு நிற வேற்று கிரக வாசியாகத் தன்னை மாற்றிக்கொண்டார்.

    இப்படி தனக்குப் பிடித்தவாறு உடல் அமைப்பை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்திவந்த அந்தோனி படும் துயரங்களும், பிரச்சனைகளும் ஏராளம் இருக்கிறதாம். ஆம் இந்த உடல் அமைப்போடு பொது இடங்களுக்குச் செல்லும் போது மக்கள் அலறி ஓடுகிறார்கள். குறிப்பாகக் குழந்தைகள் பேய் என்று ஓடும் நிகழ்வுகளெல்லாம் நடக்கிறது. இதனையடுத்து மற்றவர்கள் கண்ணில் படாமல் தப்பித்து வாழ்க்கை நடத்திவருகிறார்.

    Also Read:செங்கடலில் ஒரு மரணக்குளம்.. உப்பால் உயிர்களைக் கொல்லும் இடம்!

    இதனைத்தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், என்னுடைய தனித்துவமான தோற்றத்தால் இதுவரை நிறைய நெகட்டிவ்வான விஷயங்களைத்தான் என் வாழ்க்கையில் அனுபவித்துள்ளேன், பாசிடிவ் எதுவும் நடைபெறவில்லை என ஒப்புக்கொண்டார். மேலும் நான் ஒரு மனிதன் தான் ஆனால் என்னைப் பைத்தியக்காரன் என மக்கள் நினைக்கிறார்கள் இது எனக்கு மிகுந்த மன வேதனையளிப்பதாகக் கூறுகிறார்.

    மேலும் நானும் சாதாரண மனிதன் தான், என்னையும் கொஞ்சம் மதியுங்கள் என்றும். நெகடிவ்வான விஷயங்களாக என்னைப் பார்க்காமல் பாசிட்டிவாக பாருங்கள் என உருக்கத்துடன் கூறுகிறார். ஆனால் என்னைப் பலரும் பைத்தியக்காரன் என நினைப்பது வேதனையளிப்பதாகவும் தெரிவிக்கிறார் கருப்பு வேற்றுக்கிரக வாசியாக மாறிய அந்தோனி லோஃப்ரெடோ..

    இவ்வுலகில், தான் மட்டும் தனித்து இருக்கவேண்டும், புதுமையாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உடலில் அனைத்து அமைப்புகளையும் மாற்றிய இந்த இளைஞரின் துயரம் எப்போதும் மாறப்போவதில்லை.. வித்தியாசமாக வாழலாம்.. அதற்கென்று ஒரு வரைமுறை உள்ளது என்ற கருத்துகளும் பரவலாகப் பேசப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Alien, France

    அடுத்த செய்தி