Home /News /trend /

உண்மை காதல் என்று நிருபிக்க காதலனின் HIV ரத்தத்தைத் தனது உடம்பில் செலுத்திய 15 வயது சிறுமி! அதிர்ச்சி சம்பவம்

உண்மை காதல் என்று நிருபிக்க காதலனின் HIV ரத்தத்தைத் தனது உடம்பில் செலுத்திய 15 வயது சிறுமி! அதிர்ச்சி சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

காதலனின் HIV ரத்தத்தைத் தனது உடம்பில் காதலி செலுத்திக்கொண்டுள்ளார். இந்த செய்தி இணையத்தை பரபரப்பாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India
    தனது காதலை நிரூபிக்க காதலனின் HIV பாதிக்கப்பட்ட ரத்தத்தை ஊசியின் மூலம் தனது உடம்பில் 15 வயது சிறுமி செலுத்திக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காதலுக்காக வரலாற்றில் நிறையத் தியாக கதைகள் இருக்கின்றன. புராணக் கதைகள் தொடங்கி மேல்நாட்டுக் கதைகள் வரை காதலில் தியாகங்களை வித விதமாகத் தெரிவித்துள்ளது. பல காதல் கதைகளைத் திரைப்படங்கள் பார்வையாளர்களுக்குப் பல விதங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு சிறுமி தனது காதலன் மேல் வைத்திருக்கும் காதலை உண்மை என்று நிரூபிக்க வினோதமான முறையில் முயன்றுள்ளார்.

    Also Read :காலையில் பள்ளி, மாலையில் Zomotoவில் வேலை.. குடும்பத்தை காக்க விபத்தில் சிக்கிய தந்தையின் வேலையை செய்யும் சிறுவன்- வைரல் வீடியோ

    அசாம் மாநிலத்தில் சூல்குச்சி மாவட்டம் சேர்ந்த 15 வயது சிறுமி, முகநூல் மூலம் இளைஞன் ஒருவரிடம் பழகி காதலித்துள்ளார். சிறுமியும் அந்த இளைஞனும் கடந்த மூன்று வருடங்களாகக் காதலிப்பதாகச் சொல்லப்படுகிறது. இளைஞன் மேல் இருந்த காதலில் பல முறை வீட்டை விட்டு அந்த இளைஞனுடன் சென்றுள்ளார். அப்படிச் செல்லும்போது எல்லாம் சிறுமியின் பெற்றோர்கள் திரும்பி அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியின் காதலனுக்கு HIV பாதிப்பு இருந்துள்ளது. சிறுமி தனது காதல் உண்மை என்பதை நிரூபிக்க அந்த காதலனின் HIV பாதிக்கப்பட்ட ரத்தத்தை ஊசியின் மூலம் தனது உடம்பில் செலுத்திக் கொண்டுள்ளார்.



    இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பலரும் இந்த செயலை பைத்தியக்காரா தனம் என்றும் இந்த வயதில் காதலின் அர்த்தம் தெரியாமல் நடந்துகொள்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளனர். மேலும் மீம் - களை பதிவிட்டு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    Also Read :மெக்காவில் கிளாக் டவரை தாக்கிய சக்தி வாய்ந்த மின்னல்.. அடுத்து நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ

    தற்போது அந்த சிறுமியின் செயல் பெற்றோர்களுக்குத் தெரிந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் அந்த இளைஞனைக் கைது செய்துள்ளனர். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
    Published by:Janvi
    First published:

    Tags: HIV Blood, Love

    அடுத்த செய்தி