’கொள்ளுப்பாட்டியின் அடடே அழகு’ - 99 வயதில் மாடலிங்கில் அசத்திய பாட்டி

99 வயது பாட்டி

அமெரிக்காவில் பேத்தியின் மேக்கப் பிராண்டை பிரபலப்படுத்துவதற்காக 99 வயது பாட்டி மாடலிங்காக மாறிய புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

 • Share this:
  கலிஃபோர்னியாவைச் சேர்ந்த லேனி கிரௌவல் (Laney Crowell) புதியதாக சாய் பியூட்டி (Saie Beauty) என்ற மேக்கப் பிராண்டை உருவாக்கியுள்ளார். தன்னுடைய பிராண்டை பிரபலப்படுத்துவதற்காக முயற்சி எடுத்த அவர், வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளார். மாடலிங் துறையினரை அணுகி தன்னுடைய பிராண்டை பிரபலப்படுத்தவும் லேனி கிரௌவல் திட்டமிட்டிருந்துள்ளார். திடீரென ஒரு நாள் தனது பாட்டியை மாடலாக மாற்றினால் என்ன? என யோசித்து அவர், இந்த திட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என எண்ணியுள்ளார்.

  அதன்படி, தனது 99 வயது நிரம்பிய பாட்டியை அணுகிய அவர், அழகாக மேக்கப் செய்து புகைப்படம் எடுத்துள்ளார் ஹெலன் சிமோன் என அழைக்கப்படும் பாட்டி நானா, மிகவும் அழகாக அந்தப் புகைப்படத்தில் இருக்கிறார். சிரித்த முகத்துடன் ரோஜாப் பூவை கையில் ஏந்தியிருக்கும் அவரின் வெள்ளந்தியான முகம், பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது. மேலும், பேத்தி லேனி கிரௌவல் எதிர்பார்க்காத வகையில் இணையத்தையும் பாட்டியின் புகைப்படம் ஆக்கிரமித்துள்ளது. பலரும் பாட்டியின் சிரிப்பு மற்றும் வெள்ளந்தியான முகத்துக்கு ரசிகராக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். புகைப்படத்தை பார்க்கும்போது ஒரு விதமான அன்பும், அரவணைப்பும் கிடைப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

  பாட்டியை மாடலாக மாற்றியது குறித்து பேசிய கிரௌவல், மார்க்கெட்டில் மாடல்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி இருக்கும் சூழலில், பாட்டியை மாடலாக மாற்றினால் எந்தவிதமான போட்டியும் இருக்காது என எண்ணியதாக தெரிவித்தார். தான் நினைத்தப்படி, ஐடியா மிகப்பெரிய வெற்றியையும், அதிகம் பேரை கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். நானாவுக்கு தற்போது 11 பேரக்குழந்தைகளும், 6 கொள்ளு பேரக்குழந்தைகளும் இருப்பதாக லேனி கிரௌவல் தெரிவித்துள்ளார். பாட்டியை முதலில் சம்மதிக்க வைப்பது மிக்கபெரிய சவாலாக இருந்ததாகவும், அவரை சம்மத்திக்க வைக்க ஒரு சிறிய டிரிக்ஸை கடைபிடித்ததாக தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  "பாட்டிக்கு பிடிக்கும் கூடைப்பந்தாட்ட வீரரை புகைப்படம் எடுத்த போட்டோகிராஃபரை அழைந்து வந்து சந்திக்க வைத்தேன். அப்போது மகிழ்ச்சியடைந்து மாடலாக போஸ் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டார். புகைப்படம் எடுக்கும்போது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அங்கு திரண்டிருந்தோம். அவருடைய புகைப்படம் பல்வேறு வார மற்றும் மாத இதழ்களிலும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என கிரௌவல் கூறினார்.   
  View this post on Instagram

   

  A post shared by Saie (@saiebeauty)

  பாட்டி நானா பேசும்போது, "புகைப்படம் எடுக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருந்தார்கள். மிகவும் ஜாலியாகவும், சிரித்துக்கொண்டே இருந்தோம். நான் ஒரு மாடலாக மாறுவேன் என கனவிலும் நினைத்ததில்லை. சிறு வயதில் இருந்தே அதிகம் மேக்கப் செய்து கொள்ள எனக்கு பிடிக்காது. இந்த புகைப்பட சூட்டிங்கின்போதும் அதிக மேக்கப் போடாமல் இயல்பாக இருந்தேன்" எனக் கூறினார்.
  Published by:Karthick S
  First published: