ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

93 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதலையின் வயிற்றில் இருந்த ஆச்சரியம்... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

93 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதலையின் வயிற்றில் இருந்த ஆச்சரியம்... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மாதிரி படம்

மாதிரி படம்

ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட படிமம் என்பது தெரிய வந்துள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Internat, Indiaaustraliaaustralia

  பழங்கால ஆராய்ச்சியாளர்களின் குழு ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 95 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதலையின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த போது தான் இந்த வியக்கத்தக்க நிகழ்வு நடந்துள்ளது. இந்த முதலை அறியப்படாத முதலை இனம் என்றும் இதில் அறிந்துள்ளனர்.

  ஆனால் இது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முதலை இறப்பதற்கு முன் ஒரு முழுமையான மற்றும் எதிர்பாராத உணவை உண்டதாக தெரிகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இறந்த முதலையின் வயிற்றில், கோழியை விட சற்று பெரிய டைனோசரின் எச்சங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

  ஆஸ்திரேலிய ஏஜ் ஆஃப் டைனோசர்கள் அருங்காட்சியகத்தின் ஆய்வளரான மேட் வைட் தான் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கினர். விண்டன் ஃபார்மேஷன் எனப்படும் புவியியல் பாறை அமைப்பில் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் குழு இந்த ஆய்வை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதே இடத்தில் தான் சில காலங்களுக்கு முன்பு டைனோசர் எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவினர் சரோபாட் (sauropod) விலங்கின் எலும்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​இந்த முதலையின் எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

  கோழிய வச்ச தூண்டிலில் சிக்கிய ராட்சத மலைபாம்பு... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ

  எட்டு அடி நீளமுள்ள இந்த முதலை இனம் கான்ஃப்ராக்டோசஸ் சௌரோக்டோனோஸ் என ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகிறது. X- கதிர்கள், CT ஸ்கேன்கள் மற்றும் 3D கணினி மாடலிங் போன்றவை, இவை பின்னிப்பிணைந்த எலும்புகளைப் பற்றி புரிந்துகொள்ள பயன்படுகின்றன என்று ஆய்வாளர் வைட் கூறினார். நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இந்த புதைபடிவங்களுக்குள் நாம் காணக்கூடிய புதிய வாழ்க்கையை காட்டுகிறது. இது நாம் பார்க்கும் விஷயங்களை வேறு திசையில் பார்க்க உதவுகிறது என்றும் கூறினார்.

  இவர்கள் கண்டுபிடித்த முதலையானது ஒரு வகை டைனோசரை சாப்பிட்டு இருக்கலாம். இது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆர்னிதோபாட் என்கிற தாவரவகை டைனோசர் ஆகும். புதைப்படிவங்களை ஆய்வு செய்த ​​​​ஆராய்ச்சியாளர்கள், ஆர்னிதோபாட் டைனோசரின் தொடை எலும்புகளில் ஒன்றை முதலை பாதியாக கடித்து விட்டதாக அறிந்துள்ளனர். முதலை இனங்கள் டைனோசர்களை உண்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை என்றாலும், இளம் டைனோசர்களை எளிதில் சாப்பிட முடியும் என்று ஆய்வாளர்கள் விளக்கினர்.

  இந்தியாவில் 500 ஆண்டுகளாக பெண்கள் நடத்தும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தை!

  ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட படிமம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த முதலையின் இறப்பிற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், உணவுச் சங்கிலியில் முதன்மை உயிரினங்களான முதலையின் வயிற்றில் இப்படியொரு படிமம் இருந்திருப்பது புதிய ஒன்றாக கருதப்படுகிறது.

  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த முதலையின் படிமங்கள் இப்போது ஆஸ்திரேலிய ஏஜ் ஆஃப் டைனோசர்ஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தி வெளியானதில் இருந்து, இதை பற்றிய ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முதலையை பார்க்க விரும்புவோரும் நேரடியாக இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிடுகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News, Viral