90s கிட்ஸ்களை ஏங்க வைக்கும் திருமண விருந்து மெனு அட்டை-வைரலாகும் புகைப்படம்

மாதிரி படம்

1990 ஆம் ஆண்டில் ஒரு பெங்காலி திருமணத்தின் திருமண மெனு அட்டை தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

  • Share this:
உங்களை ஏங்க வைக்கும் கடந்த கால நினைவுகள். 90களில் பிரபலமாக இருந்த திருமண விருந்து மெனு அட்டை, தற்போது இணையத்தை வைரலாகி வருகிறது.சில்லி சிக்கன், ஃபிரைடு ரைஸ் முதல் பான் பீடா வரை, இந்த உணவுப் பட்டியிலில் இருக்கும் ஒவ்வொரு உணவும் சப்பு கொட்ட வைக்கின்றன. இந்த திருமண உணவுப் பட்டியல் புகைப்படம் டிவிட்டரில் பகிரப்பட்டது. 

நம் பெற்றோர் திருமணம் செய்த காலத்திலிருந்து, தற்போது வரை, இந்தியாவில் திருமணங்கள் பல்வேறு விதமாக மாற்றங்களுடன் பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது. எளிமையான திருமண அலங்கார ஸ்டைல்கள் முதல், மிகவும் பிரம்மாண்டமான டெஸ்ட்டினேஷன் வெட்டிங் எனப்படும் குறிப்பிட்ட இடத்தின் கருப்பொருள் சார்ந்த அலங்காரங்கள் நிறைந்த திருமணங்கள் வரை, இப்போதைய திருமணத்தின் பல போக்குகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை அல்ல. திருமணத்தில் தற்போது பரிமாறப்படும் உணவுகள் என எடுத்து கொண்டால் , பண்டைய கால உணவுகளை தவிர்த்து சைனீஸ், போன்ற பிற நாடுகளை சேர்ந்த உணவு வகைகள், கண் கவர் இனிப்பு வகைகள் பரிமாறப்படுகிறது.

90கள் என்றாலே அழகான நினைவுகள் தோன்றும். அந்த காலகட்டத்தில் நடைபெற்ற திருமணங்கள் மிகவும் வேறுபட்டவை. அது மட்டுமின்றி, ஒவ்வொரு திருமணத்தின் முக்கியமான பகுதி, திருமணத்தின் பல்வேறு தருணங்களில் நிகழ்வுகளில் பகிரப்படும் உணவுகள் தான். இப்போது பல்வேறு நாட்டு உணவுகள் திருமணத்தில் வழங்கப்பட்டாலும், சில உணவுகள் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தன.



90களில் நடந்த திருமணங்களில் என்ன விதமான உணவுகள் பரிமாறப்பட்டிருக்கும்? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, 90இல் நடந்த ஒரு திருமணத்தின் உணவுப் பட்டியல் டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

AlsoRead :உலகிலேயே அதிக எடையுள்ள அம்ராபுரி மாம்பழங்களை வளர்க்கும் மத்தியபிரதேச சகோதரர்கள்!

1990 ஆம் ஆண்டில் ஒரு பெங்காலி திருமணத்தின் இந்த திருமண மெனு அட்டை, ட்விட்டரில்பகிரப்பட்டது. சுவையான உணவுகள் மற்றும் அட்டையின் எளிய லேஅவுட் ஆகியவை உங்களை கடந்த காலத்துக்கு இழுத்துச் செல்லும். “OMG, என் கசின் என்னுடைய பெற்றோரின் திருமண வரவேற்பு மெனு அட்டையைக் கண்டுபிடித்துள்ளார்” என்ற கேப்ஷனுடன் திருமண மெனு அட்டை பகிரப்பட்டது.

Also Read : நூதன முறையில் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு... தீர்வு ஒரே ஒரு பூட்டு

டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த பதிவில், திருமண மெனு உணவாக இரண்டு படங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அந்த உணவுப்பட்டியல் 90 களில் மிகவும் பிரபலமான இருந்த, பிரசித்தி பெற்ற உணவுகளைக் கொண்டிருந்தது. சில்லி சிக்கன், ஃபிரைடு ரைஸ் முதல் பான் பீடா வரை, ஒவ்வொரு உணவும் உங்களை அடிமையாக்கும் அளவுக்கு சுவையான உணவுகள். அது மட்டுமின்றி, இந்த மெனுவின் புகைப்படங்களுடன், கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்ட உணவகங்களிலிருந்து இனிமையான குறிப்பைப் பார்க்க மறக்காதீர்கள்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: