90’ஸ் கிட்களின் பேவரைட் விளம்பரங்களில் ஒன்றான ‘குளுகான் டி’ பற்றிய நினைவலைகள் மீண்டும் ட்விட்டரில் காரசாரமாக பகிரப்பட்டு வருகிறது.
இன்றைய ஆன்லைன் ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் கிராபிக்ஸ், டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் பல விளம்பரங்கள் வந்தாலும், அவை குழந்தைகளை பெரிதாக கவருவது கிடையாது. ஆனால் 90களில் குழந்தைகளை கவரும் விதமாக வந்த பல தின்பண்டங்கள், குளிர்பானங்கள், உணவுப்பொருட்களின் விளம்பரங்கள் எப்போதுமே எவர் கிரீனாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை அவ்வப்போது மீண்டும் ட்ரெண்டாகி மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்துச் செல்வது உண்டு.
‘வாஷிங் பவுடர் நிர்மா’, ‘சின்ன சின்ன ஆசை’, ‘பெரியவர், சிறியவர் அனைவரும் விரும்பும் நிஜாம் பாக்கு’ ஆகிய விளம்பரங்களின் பாடல் வரிகளை 90’ஸ் கிட்ஸ்களின் நினைவை விட்டு அகலாதவை. அப்படிப்பட்ட விளம்பரங்களில் எனர்ஜி டிரிங்கான குளுகான்-டி (Glucon-D) விளம்பரத்திற்கு தனி இடம் உண்டு. குறிப்பாக நீங்கள் 90’ஸ் கிட்ஸாக இருந்தால், சம்மர் சமயத்தில் இந்த சுவையான பானம் இல்லாமல் உங்கள் குழந்தைப் பருவத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
also read : டிஸ்னி+ஹாட் ஸ்டார் சந்தாவுடன் IPL 2022ஐ பார்த்து மகிழ உதவும் Jio ப்ரீபெய்ட் பிளான்கள்..
90களில் வெளியான குளுகான்-டி (Glucon-D) விளம்பரத்தில், காலையில் பிள்ளைகள் சுறுசுறுப்பாக பள்ளிக்குச் கிளம்பிச் செல்வார்கள். அங்கு படிப்பு, விளையாட்டு என வெளியில் ஆடி, ஓடி அலுத்துவிடுவார்கள். சூரியன் ஸ்ட்ரா போட்டு அவர்களது எனர்ஜியை உறிஞ்சுவதால் அவர்கள் எனர்ஜி லெவல் முற்றிலும் குறைந்துவிட்டதாக காட்டப்படும்”. இந்த விளம்பரத்தில் ஆரஞ்சு நிறத்தில் தகதகக்கும் சூரியன் குழந்தைகளின் எனர்ஜியை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போன்ற கார்ட்டூன் வடிவமைப்பு குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதனால் குளுகான்-டி (Glucon-D) விற்பனையும் பல மடங்கு அதிகரித்தது.
also read :
இப்படி 90’ஸ் கிட்ஸ்களின் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்த இந்த விளம்பரம் தற்போது மீண்டும் சோசியல் மீடியா ட்ரெண்டாகி வருகிறது. காலங்கள் உருண்டோடினாலும் அந்த விளம்பரத்தை பார்க்கும் போது ஏற்படும் உணர்வுகள் தன்னை குழந்தை பருவத்திற்கே அழைத்துச் செல்வதாக ட்விட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
also read : இவங்க தான் உலகிலேயே மிக உயரமான குடும்பம்.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பேமிலி!
also read : ரசாயனம் எதுவும் இன்றி வருட கணக்கில் பாதுகாத்து வைக்கப்படும் திராட்சைகள் - எப்படி சாத்தியம்!
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் பலவகையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் அதிதி மல்லேஷ் என்பவர் ‘Glucon-D’ விளம்பரம் பற்றிய போட்டோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து, "இந்த விளம்பரம் என் மூளையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சூரியன் இவ்வாறு தான் செயல்படுகிறதோ என நான் இன்னும் நம்புகிறேன்” என பதிவிட்டார்.
உடனடியாக இந்த ட்விட்டிற்கு கமெண்ட்கள் குவிய ஆரம்பித்தன. 90’ஸ் கிட்ஸ்கள் பலரும் இது “என்னுடைய குழந்தை பருவத்தை நினைவுப்படுத்துகிறது. அப்போது குளுகான்-டி பானத்தை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ்கள் வரை குடிப்பேன்” என விதவிதமான கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.