ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

90 வயதான பெண் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரியில் பட்டம் பெற்று சாதனை..!

90 வயதான பெண் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரியில் பட்டம் பெற்று சாதனை..!

பட்டமளிப்பு உடையில் ஜாய்ஸ்

பட்டமளிப்பு உடையில் ஜாய்ஸ்

விடாமுயற்சியை கையில் எடுத்த ஜாய்ஸ் கடைசியாக பட்டம் பெற்றார். கறுப்பு கவுன் மற்றும் பொருத்தமான கருப்பு தொப்பியுடன் தனது தொடக்க விழாவில் பட்டம் பெறுவதற்காக மேடை முழுவதும் நடந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சாதனைகளுக்கு வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை அவ்வப்போது சிலர் நமக்கு உணர்த்திவிட்டு செல்கின்றனர். இளம் வயதிலேயே சாதனை செய்ய கூடிய குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். அதே போன்று, சமீப காலமாக பல வயதானவர்களும் ஏராளமான சாதனைகளை செய்து அசத்தி வருகின்றனர். இந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடிப்பவர் தான் 90 வயதாகும் ஜாய்ஸ் வயோலா டிஃபா. இவரை பற்றிய சாதனைமிக்க நிகழ்வை தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

பொதுவாக நமக்கு படித்து பட்டம் பெறுவது என்பது பெருமையான தருணங்களில் ஒன்றாக இருக்கும். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜாய்ஸ் வயோலா டிஃபா, தனது 90 வயதில் பலரை தனது பட்டம் மூலம் ஆச்சரியப்படுத்தி உள்ளார். இவர் வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பொதுப் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் முதன்முதலில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு இது நடந்தாலும், இவரின் வாழ்க்கை செய்தி நமக்கு உணர்த்துவது ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதுதான்.

ஜாய்ஸின் கல்லூரி அடையாள அட்டை 1951

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “தொடருங்கள். விட்டுவிடாதீர்கள். நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம், ஆனால் அங்கேயே இருங்கள், ஏனென்றால் உங்களுக்கான முடிவு வரும், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்." என்று ஜாய்ஸ் கூறியுள்ளார்.ஜாய்ஸின் கதை உண்மையில் ஒரு ஊக்கமளிக்கும் கதை. இவர் முதலில் 1951-இல் வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இருப்பினும், மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது வாழ்க்கையை விட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டு தனது முதல் கணவருடன் குடும்பம் நடத்த முடிவு செய்தார்.

Read More : காத்து வாக்குல ரெண்டு காதல்.. ஒரே நேரத்தில் இரண்டு மனைவியும் கர்ப்பம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த யூடியூபர்!

இவரது முதல் கணவர் இறந்த பிறகு, ஜாய்ஸ் மறுமணம் செய்து கொண்டு மேலும் குழந்தைகளைப் பெற்றார். இவருக்கு இப்போது ஒன்பது மற்றும் பதினேழு பேரக்குழந்தைகள் உள்ளனர். இவருடைய வாழ்க்கை மிகவும் பிஸியாக இருந்துள்ளது. ஆனால் இவர் கல்லூரி படிப்பை மறக்கவில்லை என்பது மட்டும் உண்மை. இவருடைய குழந்தைகள் ஜாய்ஸின் கனவுகளைத் தொடர ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இவருக்கு உதவ ஒரு கணினியையும் பரிசாக கொடுத்துள்ளனர்.

பட்டமளிப்பு விழாவில் ஜாய்ஸ்

வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் பொதுப் படிப்பில் இளங்கலை பட்டம் பெறுவதற்கான ஆன்லைன் படிப்பிற்காக ஆகஸ்ட் 2019-இல் விண்ணப்பித்து பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்தார். இந்த நிகழ்வு குறித்து ஜாய்ஸிடம் கேட்டபோது, "வாழ்க்கையில் பல சலுகைகள் உள்ளன, அதைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நீங்கள் பலவற்றை இழக்கிறீர்கள்." என்று குறிப்பிட்டார்.

விடாமுயற்சியை கையில் எடுத்த ஜாய்ஸ் கடைசியாக பட்டம் பெற்றார். கறுப்பு கவுன் மற்றும் பொருத்தமான கருப்பு தொப்பியுடன் தனது தொடக்க விழாவில் பட்டம் பெறுவதற்காக மேடை முழுவதும் நடந்தார். அதில் கோல்டன் ஸ்டார் மற்றும் ‘சூப்பர் சீனியர் ’22’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த மைல்கல்லை அடைய முடிந்ததற்காக "மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும்" உணர்கிறேன் என்றும் ஜாய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்ற, புளோரிடாவைச் சேர்ந்த ஒரு பெண் தனது 85 வயதில் பட்டமளிப்பை பெற்று அசத்தியுள்ளார். அவர் தனது வாழ்க்கையில் கற்றல் குறைபாடு இருப்பதை அறிந்தார், இது அவரது பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடிக்க உந்துதல் இல்லாததற்கு பங்களித்தது. ஆர்லின் பிராங்கல் என்கிற வயதான பெண் தனது 80 வயதில் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பட்டப்படிப்பை முடிக்க 5 வருடங்கள் எடுத்தாலும், அவர் தனது கனவுகளை எட்டி பிடித்துள்ளார்.

First published:

Tags: Trending, Viral