Home /News /trend /

35 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன திருமண மோதிரத்தை கண்டுபிடித்த 90 வயது மூதாட்டி!

35 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன திருமண மோதிரத்தை கண்டுபிடித்த 90 வயது மூதாட்டி!

திருமண மோதிரத்தை கண்டுபிடித்த 90 வயது மூதாட்டி

திருமண மோதிரத்தை கண்டுபிடித்த 90 வயது மூதாட்டி

Trending | மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 35 ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவரின் தொலைந்து போன மோதிரத்தை கண்டுபிடித்துள்ள ஆன் கென்ட்ரிக் ஏழு குழந்தைகளுக்கு தாய் ஆவார்.

நம் அன்புக்குரியோர்கள் இறந்து போகலாம். ஆனால் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். அப்பா இறந்து இருக்கலாம் ஆனால் அவர் உட்கார்ந்த நாற்காலி ஒருபோதும் சாகாது; அம்மா சாமிகிட்ட சென்று இருக்கலாம் ஆனால் அவள் அடிக்கடி கட்டிய சேலை எங்கும் செல்லாது; மாமா தவறி இருக்கலாம் ஆனால் அவர் பயன்படுத்திய கண் கண்ணாடி ஒருபோதும் தவறாது. இப்படி ஒவ்வொரு உறவுக்கும், அவர்களின் கதைகளை சொல்லும் ஏதோவொரு பொருள், ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ளது.

இப்படியாக, தன் கணவரின் கதைகளை சொல்லும் அவரின் திருமண மோதிரம், தொலைந்துபோன 35 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள நெகிழ்ச்சியில், மகிழ்ச்சியிலும் மூழ்கி திளைக்கிறார் - இங்கிலாந்தை சேர்ந்த ஆன் கென்ட்ரிக் என்கிற 90 வயது மூதாட்டி!

இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கில் உள்ள கார்ன்வால் கவுண்டியை சேர்ந்த 90 வயதுமிக்க ஆன் கென்ட்ரிக், தோட்டத்தில் வேலை செய்யும் போது, ஒரு ஆப்பிள் மரத்தின் அடிப்பகுதியை துடைக்கும்போது அவர் கையில் ஏதோவொன்று தட்டுப்பட்டுள்ளது. அதை ஒரு உலோகத் துண்டு என்று எண்ணி அதை எடுத்து, பின் அதை கூர்மையாக ஆய்வு செய்தபோது, ​​ஆன் கென்ட்ரிக்கால் தனது கண்களையே நம்பவில்லை, ஏனெனில் அது 1987ல் தோட்டத்தில் வேலை செய்யும் போது தனது கணவர் பீட்டரால் தொலைக்கப்பட்ட திருமண மோதிரமே அது!

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 35 ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவரின் தொலைந்து போன மோதிரத்தை கண்டுபிடித்துள்ள ஆன் கென்ட்ரிக் ஏழு குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்தார்.

தொலைந்து போன மோதிரம் கிடைத்தது குறித்து பேசுகையில், "(முதலில்) இது ஒரு திருமண மோதிரம் போல் இல்லை. ஒரு வளைந்த உலோகத்தின் அழுக்கு துண்டு போலவே இருந்தது". ஆனால் மோதிரத்தை அடையாளம் கண்டதுமே நான் உற்சாகத்தில் மூழ்கினேன் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஆன் கென்ட்ரிக் கூறி உள்ளார்.

அந்த மோதிரம், அது தொலைந்து போன காலகட்டத்திற்குள் சற்றே சிதைக்கப்பட்டு இருந்தாலும் கூட, இன்னும் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. மேலும் சேதமடைந்த அந்த மோதிரத்தை சரிசெய்யவும் ஆன் திட்டமிட்டுள்ளார். அதை பழுதுபார்த்த பிறகு, ஆன் கென்ட்ரிக், தனது மறைந்த கணவரின் நினைவாக அவரின் மோதிரத்தை நெக்லஸாக அணிய திட்டமிட்டுள்ளார்.

Also read... குடிபோதையில் கல்யாணத்தையே மறந்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பேச்சலர் பார்ட்டியால் ட்விஸ்ட்..

இது போன்ற அன்பின் கதை மற்றும் ஒரு மோதிரம் சம்பந்தப்பட்ட மற்றொரு கதை கனடாவில் இருந்து வெளி வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டில், அந்த நேரத்தில் 84 வயதான மேரி கிராம்ஸ், 13 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த ஒரு வைர மோதிரத்தைக் கண்டுபிடித்தார். ஆனால், ஆன் கென்ட்ரிக் போலல்லாமல், அவர் அதை மண் பகுதியின் மேலோட்டத்தில் இருந்து கண்டுபிடிக்கவில்லை. இன்னும் ஆழத்தில் இருந்து கண்டுபிடித்தார். மேரி கண்டுபிடித்த வைர மோதிரம் ஒரு கேரட்டில் சிக்கி இருந்தது; தோட்டத்தில் இருந்து புதிதாகப் பறிக்கப்பட்ட அந்த கேரட்டின் நடுப்பகுதியில் தொலைந்துபோன வைர மோதிரம் சுற்றியிருந்தது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending

அடுத்த செய்தி