• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 1 லட்ச ரூபாய் திருட்டு, முதியவருக்கு உதவிய காவல்துறை அதிகாரி - நெகிழும் நெட்டிசன்கள்!

1 லட்ச ரூபாய் திருட்டு, முதியவருக்கு உதவிய காவல்துறை அதிகாரி - நெகிழும் நெட்டிசன்கள்!

அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான்

திருட்டு செய்தியைப் பற்றி அறிந்த ஸ்ரீநகரைச் சார்த்த சீனியர் எஸ்பி சந்திப் சவுத்ரி, இந்த முதியவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.

  • Share this:
தன்னுடைய இறுதி சடங்கிற்காக, சேமித்து வரும் ஒரு லட்ச ரூபாயை பறிகொடுத்த ஸ்ரீநகரில் கடலை வியாபாரம் செய்து வந்த தனித்து வாழும் முதியவருக்கு மூத்த காவல் துறை அதிகாரி செய்த மனித நேயம் மிக்க செயல் நெட்டிசன்கள் நெகிழச் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஸ்ரீநகரில் உள்ள போரி காடல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவருக்கு 90 வயது. உறவுகள் மற்றும் குடும்பம் எதுவுமின்றி தனியே வசித்து வரும் இவர், தான் வசிக்கும் நகரில் சாலையோரத்தில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். தன்னுடைய இறுதி சடங்கிற்காக இவர் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் வரை சேமித்து வைத்திருந்தார்.

தனியே இருப்பதாலும், வயது காரணமாக ஏற்படும் நினைவுத் தடுமாற்றத்தாலும் முதியவர் ரகுமான் பணத்தை எங்கேயாவது வைத்துவிட்டு மறந்து விடுவோமோ அல்லது தொலைத்து விடுவோமோ என்ற அச்சத்தில் தன்னிடமே வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக இவர் சேமித்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை திருடர்கள் களவாடி சென்றனர். இவருடைய வீட்டிலிருந்து பணம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உதவிக்கு ஒருவரும் இன்றி தனியே வாழ்ந்து வரும் நிலையிலும் தானே உழைத்து சம்பாதித்து தங்களுடைய இறுதி சடங்கிற்காக சேர்த்து வைத்த பணம் களவாடப்பட்டதை முதியவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது, உதவிக்கும் யாருமில்லை என்று தவித்த நிலையில், மனித நேயம் மிக்க காவல்துறை அதிகாரி செய்த உதவி அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.

திருட்டு செய்தியைப் பற்றி அறிந்த ஸ்ரீநகரைச் சார்த்த சீனியர் எஸ்பி சந்திப் சவுத்ரி, இந்த முதியவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். மனம் கலங்கிய நிலையில் இருந்த முதியவருக்கு காவல்துறை அதிகாரி தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் பாராட்டை தொடர்ந்து பெற்று வருகிறது.

Also read... கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய காய்கறிகள் - வைரலாகும் வீடியோ!

"பணத்தை திருட்டுக் கொடுத்த வயதான நபருக்கு தன்னுடைய சொந்த பணத்திலிருந்து உதவி செய்த காவல்துறை அதிகாரியை மனமார பாராட்டுகிறோம்" என்று நெட்டிசங்கள் பாராட்டி தள்ளுகின்றனர். மேலும் “தன் வீட்டிலேயே பணம் களவாடப்பட்டு மிகவும் வருத்தத்தில் இருந்த, தனியாக வாழும் முதியவருக்கு உதவிய மனிதநேயம் மிக்க‌ ஸ்ரீநகர் காவல்துறை மற்றும் அதிகாரி சந்திப்பிற்கு பாராட்டுக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துகிறேன், சல்யூட் சார்!” என்று SMC டெபுடி மேயர் பர்வைஸ் அஹ்மது கத்ரி டிவிட்டரில் பாராட்டி டிவீட் செய்துள்ளார்.



காவல்துறை எஸ்பி உதவி செய்தது மட்டுமின்றி, இதை வழக்காகவும் பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் முதியவரிடம் இருந்து பணத்தைத் திருடியவர்களை கண்டுபிடிப்போம் என்றும் ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: